116ஆவது வடக்கின் பெரும் போர் - வெற்றிக் கிண்ணம் யாழ் - மத்திய கல்லூரிக்கே

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

116ஆவது வடக்கின் பெரும் போர் - வெற்றிக் கிண்ணம் யாழ் - மத்திய கல்லூரிக்கே

116ஆவது வடக்கின் பெரும் போர் வெற்றிக் கிண்ணத்தை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி கைப்பற்றியது. இதன் மூலம் 29 தடவையாக பெருந்துடுப்பாட்ட போட்டியில் அந்த அணி சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.

சென். ஜோன்ஸ் கல்லூரி அணியை 9 விக்கெட்களால் வெற்றி கொண்டதன் மூலம் யாழ். மத்திய கல்லூரி இந்த சாதனையைப் படைத்துள்ளது.

யாழ்ப்பாணத்தின் முதலாவது பெருந்துடுப்பாட்டப் போட்டியான வடக்கின் பெரும் போர் 116ஆவது ஆண்டாக இம்முறை நடந்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் பின்தொடர்ந்து ஆடிவந்த சென். ஜோன்ஸ் கல்லூரி நேற்று முன்தினம் ஆட்டம் நிறைவுக்கு வந்தபோது 7 விக்கெட்கள் இழப்புக்கு 137 ஓட்டங்களுடன் தடுமாறியது.

கவிசன் 22, விதுசன் 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்றைய தினம் இருவரும் தொடர்ந்து துடுப்பெடுத்தாடினர். ஆனால், இந்த இணை நிலைக்கவில்லை. மேலதிகமாக எந்த ஓட்டமும் எடுக்காமலேயே விதுசன் ஆட்டமிழந்தார். அவர் 53 பந்துகளில் 12 ஓட்டங்களை சேர்த்திருந்தார்.

அடுத்து வந்த அசாந்த் நிலைக்க முயற்சித்தார். ஆனால், அவர் 6 ஓட்டங்களுடன் பருதியின் பந்துவீச்சில் சஞ்சயனிடம் பிடிகொடுத்து வெளியேறினார். மறுமுனையில் நிதானித்து ஆடிய கவிசனுடன் இறுதி விக்கெட்டுக்காக இணைந்தார் கஜகர்ணன்.

இருவரும் நிலைத்து ஆட முயன்றபோதும் கவிசன் 37 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 53.2 ஓவர்களில் சென். ஜோன்ஸ் கல்லூரி சகல விக்கெட்களையும் இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி சார்பாக பந்து வீசிய நியூட்டன், பருதி ஆகியோர் தலா 5 விக்கெட்களை வீழ்த்தினர்.

இது யாழ். மத்திய கல்லூரி முதல் இன்னிங்ஸில் பெற்ற 8 ஓட்டங்களே அதிகமாகும். எனவே, 9 ஓட்டங்கள் பெற்றால் போதும் வெற்றி என்ற இலகு இலக்குடன் களமிறங்கியது மத்திய கல்லூரி. அணித் தலைவர் கஜன் - சஞ்சயன் தொடக்கம் கொடுத்தனர். கஜன் ஓர் ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். ஆனால், அடுத்து வந்த விதுசன் ஒரு பௌண்ட்ரியை விளாசினார். 3.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 9 ஓட்டங்களைப் பெற்ற மத்திய கல்லூரி வெற்றி பெற்றது.

சஞ்சயன் 2, விதுசன் 5 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றனர்.

வீழத்தப்பட்ட ஒரு விக்கெட்டையும் சென். ஜோன்ஸ் வீரர் அபிசேக் கைப்பற்றினார்.

முன்னதாக, கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சென். ஜோன்ஸ் கல்லூரி அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 279 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதில், நிசாந்தன் அஜய் 74, விதுசன் 71, சஞ்சயன் 42, அனுசாந்த் 27 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

பதிலுக்கு முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய சென். ஜோன்ஸ் கல்லூரி 51.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 127 ஓட்டங்களைப் பெற்றது. இதில், ஜெசீல் 43, சபேசன் 34 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றனர்.

152 ஓட்டங்கள் பின்தங்கியிருந்த சென். ஜோன்ஸ் கல்லூரி ஆட்டத்தைப் பின்தொடர்ந்து ஆடியது. மத்திய கல்லூரியின் அபார பந்துவீச்சுக்கு முன்னால் இரண்டாவது இன்னிங்ஸிலும் அந்த அணியால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. கவிசன் 37, ஜனத்தன் 26, ஜெசீல் 25 ஓட்டங்களை அதிகபட்சமாக எடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றிபெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு வெற்றிக் கிண்ணத்துடன் 5 இலட்சம் ரூபாய் பணப்பரிசும் வழங்கப்பட்டது.

போட்டியின் நாயகனாக நியூட்டன் தெரிவானார். இதேபோன்று சிறந்த துடுப்பாட்ட வீரராக நிசாந்தன் அஜய் (74 ஓட்டங்கள் - யாழ். மத்திய கல்லூரி) தெரிவானார். சிறந்த பந்துவீச்சாளராக பருதி (5 விக்கெட்கள் -யாழ். மத்திய கல்லூரி), சிறந்த விக்கெட் காப்பாளராக டானியல் பரமதயாளன் (யாழ். மத்திய கல்லூரி), சிறந்த களத்தடுப்பு வீரராக மகேந்திரன் கிந்துசன் (யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி) ஆகியோர் தெரிவாகினர்.

இதேசமயம், நடைபெற்று முடிந்த 116 போட்டிகளில் சென். ஜோன்ஸ் கல்லூரி 38 போட்டிகளிலும், யாழ். மத்திய கல்லூரி 29 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 41 போட்டிகள் சமநிலையில் முடிவடைந்தன. 7 போட்டிகளின் முடிவுகள் கிடைக்கவில்லை. ஒரு போட்டி கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

116ஆவது வடக்கின் பெரும் போர் - வெற்றிக் கிண்ணம் யாழ் - மத்திய கல்லூரிக்கே

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)