
posted 20th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
100ஆவது ஆண்டில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டை ஒட்டிய மெய்வன்மை போட்டிகள் கடந்த வியாழக்கிழமை கலாசாலை மைதானத்தில் நடைபெற்றன.
கலாசாலை அதிபர் ச. லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் அ. சிவபாலசுந்தரன் பிரதம விருந்தினராகவும் கலாசாலையின் முன்னாள் அதிபரும் பிரான்ஸ் அரசால் 'செவாலியே' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவருமாகிய சிவயோகநாயகி இராமநாதன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)