
posted 10th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
அம்பாறை மாவட்டம், தெஹியத்தகண்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கு ஐக்கிய தேசியக் கூட்டமைப்பின் "தராசு" சின்னத்தில் வேட்புமனு தாக்கல் செய்தவர்களை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், அண்மையில் சந்தித்துக் கலந்துரையாடினார். அங்குள்ளஹெணாணிகல ஆதிவாசிகள் கிராமத்தில் வசிக்கும் வேடுவர் சமூகத்தவர் ஒருவரும் அந்தக் கட்சியில் போட்டியிடுவதற்கு விண்ணப்பித்துள்ளார்.
தெஹியத்தகண்டிய பிரதேச சபைக்கான பிரஸ்தாப வேட்புமனு தெரிவத்தாட்சி அலுவலரால் நிராகரிக்ககப்பட்டது தொடர்பில் சட்டமுதுமாணி ரவூப் ஹக்கீம் எம்.பி உயர்நீதிமன்றத்தில் இதுவரை இருமுறை ஆஜராகி வாதிட்டுள்ளதோடு, அந்தத் தீர்மானத்திற்கு எதிராக மூவர் அடங்கிய நீதியரசர் குழாமின், இடைக்காலத் தடையுத்தரவையும் பிறப்பிக்கச் செய்துள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)