
posted 21st March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
வீடுகள் கையளிப்பு
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான செளபாக்கியா வீடமைப்புத் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலர் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட சமூர்த்திப் பயனாளிகளுக்கான வீடுகளை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு சாய்ந்தமருதில் நடைபெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல். ஜவ்பரின் ஏற்பாட்டிலும், சமுர்த்தி தலைமைப் பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீமின் நெறிப்படுத்தலிலும் பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் தலைமையிலும் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். சப்ராஸ் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வீட்டை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
மேலும் அதிதிகளாக சமுர்த்தி மகாசங்க முகாமையாளர் ஏ.எல்.யூ. ஜூனைதா, சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் றியாத். ஏ. மஜீத், பிரிவுக்கான சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இத்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலர் பிரிவில் 9 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)