
posted 2nd February 2023
நியாய விலைக்கு நெல் கொள்வனவு செய்வதை உறுதிப்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில், இரணைமடு விவசாய சம்மேளனத்தினால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் பிரதி மாவட்ட அரசாங்க அதிபரிடம் இன்று (02) வியாழன் கையளிக்கப்பட்டது.
இதேவேளை, தொடர் மழை காரணமாக அறுவடை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்விடயம் தொடர்பில், இரணைமடு விவசாய சம்மேளனத்தின் செயலாளர் சிவமோகன் கருத்து தெரிவித்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)