
posted 25th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
விசேட சைக்கிள் பவனி
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு விசேட சைக்கிள் பவனி ஒன்று நேற்று (24) வெள்ளி இடம்பெற்றது.
நேற்றுக் (24) காலை 7:00 மணியளவில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் யாழ். போதனா வைத்தியசாலையின் முன்பாக அமைந்துள்ள யாழ்ப்பாணக் கல்லூரி உயர்பட்டபடிப்புக்கள் பிரிவில் கல்லூரியின் அதிபர் ருஷிரா குலசிங்கம் தலைமையில் இந்த நிகழ்வு ஆரம்பமானது.
மத வழிபாடுகளோடு ஆரம்பமான நிகழ்வில் 200 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 200 மரக்கன்றுகளை நாட்டும் செயல் திட்டத்தின் ஒரு அங்கமாக மூன்று மரக் கன்றுகள் யாழ்ப்பாணக் கல்லூரியின் உயர் பட்டபடிப்புக்கள் வளாகத்தில் நாட்டி வைக்கப்பட்டன.
தொடர்ச்சியாக கல்லூரியின் கொடிகளை தாங்கிய வண்ணம் கல்லூரியின் ஆண் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமது சைக்கிள் பவனியை ஆரம்பித்து கே.கே.எஸ் வீதியினூடாக கல்லூரியின் சகோதரப் பாடசாலையான உடுவில் மகளிர் பாடசாலையை அடைந்தனர். அங்கு கல்லூரியின் மாணவிகளையும் இணைத்து கொண்டு மானிப்பாய் கிறீன் ஞாபகார்த்த வைத்தியசாலையை அடைந்து பின்னர் சண்டிலிப்பாய் - சங்கானை - சித்தன்கேணியினூடாக வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியை சென்றடைந்தனர்.
கல்லூரியின் அதிபர் ருஷிரா குலசிங்கம், கல்லூரியின் பிரதி அதிபர் ஏ.சி. பிரான்சிஸ், கல்லூரியின் உப அதிபர் கிளாடிஸ் முத்துராஜ், உடுவில் மகளீர் கல்லூரியின் அதிபர் மதுரமதி குலேந்திரன், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)