
posted 13th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
வறுமை கோட்டுக்குள் வாழும் குடும்பங்களுக்கு கைகொடுத்த ம.து.ம.சங்கம்
அவுஸ்ரேலியா மன்னார் ஏயிட் குரூப் நிதி அனுசரணையுடன் மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வுச் சங்கத்தின் ஊடாக நானாட்டான் பிரதேச செயலாளரின் சிபாரிசுடன் 26 வறுமை கோட்டுக்குள் வாழும் குடும்பங்களுக்கு தலா 4 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கப்பட்டன.
கடந்த வெள்ளிக்கிழமை (10) நடைபெற்ற நிழ்வில் இதில் மாற்றுத்திறனாளிகள் பெண் தலைமைத்துவ குடும்பங்கள், வயோதிப குடும்பங்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் போன்ற குடும்பங்கள் ஆகியோருக்கே முன்னிலைப்படுத்தி இவ்உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
இதில் சுண்டிக்குளி, செம்மண்தீவு , செட்டியார் கட்டையடம்பன் , இரட்டைக்குளம், மடுக்கரை, பள்ளங்கோட்டை, கற்கடந்தக்குளம், புத்திரக்கண்டல், எருதுவிட்டான், அச்சங்குளம், அருவங்குண்று மற்றும் ராசாமடு ஆகிய கிராம அலுவலர்கள் பிரிவிற்குட்பட்டவர்களே இதில் பயண்பெற்றனர்.
இந் நிகழ்வில் நானாட்டான் பிரதேச செயலாளர் திரு.மா. சிறிஸ்கந்தகுமார், மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வுச் சங்க நிறுவன செயலாளர் செயற்குழு உறுப்பினர் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)