
posted 1st February 2023
அரசாங்கத்தின் புதிய வரி அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரால் கவனயீர்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ். பல்கலைக்கழக முன்றலில் புதன் கிழமை (01) இந்தப் போராட்டம் இடம்பெற்றது.
இப்போராட்டமானது இவ்வாறான பாதைகளை ஏந்தி கவனத்தை ஈர்த்தது;
- அநீதியான வரிவிதிப்பை நிறுத்து
- அரசின் ஊழலால் விழுந்தவர்களை வரி ஏறி மிதிக்கிறது
> பணத்தை எடுத்தவரிடம் கேட்பதே நீதி எங்களிடம் கேட்பது அநீதி
விரிவுரையாளர்கள் அமைதியான முறையில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)