வத்திராயனில் சாதனை மாணவர்கள் கௌரவிப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் கிராம சேவகர்கள் பிரிவிற்க்குட்பட்ட தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஆறு மாணவர்களும், கல்விப் பொது தர சாதாரண தர பரீட்சையில் 9 பாடங்களிலும் அதி திறமைச்சித்தி பெற்ற ஒரு மாணவன் உட்பட 21 மாணவர்களும் 11.02.2023அன்று கௌரவிக்கப்பட்டனர்.

வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் சி. சிவகுமார் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள், சாதனை மாணவர்கள், மற்றும் பிரதம, சிறப்பு கௌரவ விருந்தினர்கள் விழா மண்டபம் வரை அழைத்து வரப்பட்டு மங்கல விளக்கு எற்றப்பட்டது.

இதனைத் தொடர்நது கருத்துரைகளை பிரதம விருந்தினராக கலந்து கொண்ட மருதங்கேணி கோட்டக் கல்வி பணிப்பாளர் சிறிஇராமச்சந்திரன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வடமராட்சி கிழக்கு பிரதேச சமூக சேவை உத்தியோகத்தர் ப. பரதன், கௌரவ விருந்தினராக கலந்து கொண்ட வத்திராயன் கிராம உத்தியோகத்தர் ச. ராதிகா ஆகியோர் வழங்கியதுடன் திறமையாளர்களுக்கு பரிசில்கள் மற்றும் கௌரவங்களையும் வழங்கி கௌரவித்தனர்.

இந் நிகழ்வில் வத்திராயன் கிராம மக்கள், மாணவர்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

வத்திராயனில் சாதனை மாணவர்கள் கௌரவிப்பு

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)