வடமராட்சி - பருத்தித்துறை முனையை பார்வையிட்ட இந்தியாவின் மத்திய இணை அமைச்சர்

யாழ்ப்பாணம் வந்துள்ள இந்தியாவின் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் நேற்று வெள்ளி (10) வடமராட்சி - பருத்தித்துறை முனையை நேரில் பார்வையிட்டார்.

நேற்று மாலை 5.30 மணியளவில் இந்திய அமைச்சர் தலைமையிலான குழுவினர் பருத்தித்துறை முனையான சக்கோட்டை பகுதிக்கு வருகை தந்திருந்தார். முன்னதாக அவர் நெல்லியடி மத்திய கல்லூரியில் இந்திய உதவித் திட்டத்தில் அமைக்கப்படும் கட்டடத்தையும் நேரில் சென்று பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேசமயம், கடந்த 2021 டிசெம்பர் மாதம் இலங்கைக்கான சீனத் தூதுவர் கி சென்ஹொங் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்தார். இதன்போது, அவர் பருத்தித்துறை முனையையும் சென்று பார்வையிட்டதுடன், இங்கிருந்து இந்தியா எவ்வளவு தூரம் என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்த விடயம் இராஜதந்திர ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நேற்றைய தினம் இந்திய அமைச்சர் தலைமையிலான குழுவினர் பருத்தித்துறை முனையை சென்று பார்வையிட்டுள்ளார். இவரின் வருகை சீனாவுக்கான இராஜதந்திர பதிலடியாகவும் கருதப்படுகின்றது.

வடமராட்சி - பருத்தித்துறை முனையை பார்வையிட்ட இந்தியாவின் மத்திய இணை அமைச்சர்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)