
posted 16th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
மோட்டார் சைக்கிள் மோதியதால் காயமடைந்த முதியவர்
போக்குவரத்துப் பொலிசாரின் மோட்டார் சைக்கிள் மோதியதில் சைக்கிளில் பயணித்த முதியவர் ஒருவர் தலையில் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று (15) காலை 8.15 மணியளவில் கிளிநொச்சி வலய கல்விப்பணிமனைக்கு முன்பாக இடம் பெற்றது. ஏ9 வீதியை சைக்கிளில் கடக்க முற்பட்டவேளை, வேகமாக பயணித்த போக்குவரத்து பொலிஸாரின் மோட்டார் சைக்கிள் முதியவரை மோதியுள்ளது.
இந்த விபத்தில் ஜேசுதாஸ் (வயது - 65) என்பவரே கடுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)