
posted 15th February 2023
விபத்தில் உயிரிழந்த யாழ். மாநகர சபை உறுப்பினர் மூத்த சட்டத்தரணி மு. றெமீடியஸுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக மாநகர சபை கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டது.
மேலும் மறைந்த மு. றெமீடியஸுக்கு யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள், உத்தியோகஸ்தர்கள், ஊழியர்கள் இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தினர்.
யாழ். மாநகர சபை உறுப்பினர் றெமீடியஸ் கடந்த 7ஆம் திகதி சிறுப்பிட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானார்.
படுகாயத்தோடு யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை (11) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)