
posted 17th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
மீன்பிடி சீஸன் ஆரம்பம்
கரைவலை கடல் மீன்பிடிக்குப் பெயர் பெற்ற அம்பாறை மாவட்டத்தில் கடல் மீன்பிடி சீஸன் ஆரம்பமாகியுள்ளது.
குறிப்பாக இந்த மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களான நிந்தவூர், காரைதீவு, மாளிகைக்காடு, சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை, ஒலுவில், அட்டாளைச்சேனை போன்ற பகுதிகளில் கரைவலை மீன்பிடி இடம்பெற்று வருவதுடன், ஆழ்கடல் மீன்பிடியும் இடம்பெற்றுவருகின்றது.
பாரைக்குட்டி, கீரி, நெத்தலி போன்ற இன மீன்கள் தினமும் கணிசமான அளவு கரைவலைகளுக்குப்பிடிபட ஆரம்பித்துள்ளதால் இந்த மாவட்டத்தில் கடல் மீனின் விலை குறைவடைந்துள்ளது.
இன்று நிந்தவூர்ப் பகுதியில் கரை வலைத் தோணி மீனவர்களுக்கு திடீரெனப் பல லட்சம் ரூபா பெறுமதியான பாரை இன பெரிய மீன்கள் பிடிபட்டுள்ளன.
சுமார் எட்டு இலட்சம் ரூபா பெறுமதியான பாரை மீன்கள் இவ்வாறு பிடிபட்டதாகவும், உள்ளுர் தேவைபோக கொழும்பு போன்ற வெளியிடங்களுக்கும் மீன்கள் அனுப்பப்பட்டதாக மீனவர்களிடமிருந்து கிடைக்கும் தகவல்கள் மூலம் அறியவருகின்றது.
அம்பாறை மாவட்ட மக்களின் முக்கிய தொழிலான விவசாய செய்கையின் பெரும்போக நெல் அறுவடை முடிவுறும் நிலைக்குவந்துள்ளதால் தொழிலாளர்கள் தினமும் கடற்றொழிலை நாடிய வண்ணமுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)