மருதங்கேணி இந்து தமிழ் கலவன் பாடசாலைக்கான மைதான வளைவு திறந்து வைப்பு.

மயில்வாகனம் கன்னிகாராணி நினைவாக கட்டிக் கொடுக்கப்பட்ட வடமராட்சி கிழக்கு மருதங்கேணி இந்து தமிழ் கலவன் பாடசாலைக்கான மைதான வளைவு நேற்று புதன் (08) காலை 10:00 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர் சி. இரங்கநாதன் தலமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் வீதியிலிருந்து மைதான மண்டபம் வரை மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்.

அதனை தொடர்ந்து மைதான வளைவை சம்பிரதாய பூர்வமாக சிறப்பு விருந்தினரும் முன்னாள் பாடசாலை அதிபாமான சி. சிறி இராமச்சந்திரன் மற்றும் வளைவை கட்டிக் கொடுத்தவரும், மைதான காணியை பெற்றுக் கொடுத்தவருமான திருமதி மயில்வாகனம் வள்ளிப்பிள்ளை, பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளரும் முன்னாள் அதிபருமான அ.ச. அரியகுமார், மற்றும் விருந்தினர்கள் இணைந்து திறந்து வைத்ததனர்.

தொடர்தந்து மயில்வாகனம் கன்னிகாராணி அவர்களது உருவ படத்திற்கு மலர்மாலை மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மங்கல விளக்கை நிகழ்வின் பிரதம, சிறப்பு கௌரவ விருந்தினர்கள் ஏற்றி வைத்தனர்.

அதனை தொடர்ந்து கருத்துரைகளை சிறப்பு விருந்தினர்களான மருதங்கேணி கோட்டக்கல்வி பணிப்பாளர் சிறிராமசந்திரன், பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் அ.ச. அரியகுமார், மற்றும் பிரதிநிதிகள் நிகழ்த்தினர்.

இதில் பாடசாலை மைதானம், வளைவை போன்றவற்றை அமைத்துக் கொடுத்தவர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், கிராம மக்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

மருதங்கேணி இந்து தமிழ் கலவன் பாடசாலைக்கான மைதான வளைவு திறந்து வைப்பு.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)