
posted 3rd March 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
உலகப் பருமண் தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க மன்னார் மாவட்ட செயலகத்தில் விஷேட நடமாடும் மருத்துவ முகாம் இடம்பெற்றது.
மார்ச் மாதம் 4 ஆம் திகதி உலகப் பருமண் தினத்தை உலகம் பூராவும் நினைவு கூறுகின்றது.
இதற்கமைய இத் தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திருமதி அ. ஸ்ரான்லி டிமெல் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மன்னார் மாவட்ட தொற்றா நோய் வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி ஒஸ்மன்ட் டெனி அவர்களின் தலைமையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் மற்றும் தாதியரும் இணைந்து மன்னார் மாவட்ட செயலகத்தில் நடமாடும் மருத்துவ முகாம் ஒன்றை நடாத்தினர்.
வெள்ளிக்கிழமை (03) மன்னார் மாவட்ட செயலகத்தில் நடாத்தப்பட்ட இம் மருத்துவ முகாமில் முதல் கட்டமாக மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் 80 நபர்கள் பயன்பெற்றுள்ளனர்.
இம் மாவட்ட செயலகத்தில் கடமையாற்றுபவர்களுக்கு தொற்றா நோய் தொடர்பாக மன்னார் மாவட்ட தொற்றா நோய் வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி ஒஸ்மன்ட் டெனி அவர்களால் தொற்றா நோய் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இவர்களுக்கு உடற்பருமன், இரத்த அழுத்தம், நீரழிவு, பற்சிகிச்சை, சிறுநீரகம் மற்றும் கண் சிகிச்சை ஆகியனவற்றை பரிசோதிக்கப்பட்டதுடன் இவர்களுக்கு இதற்கான மருத்துவ ஆலோசனைகளும், மருத்துவமும் இடம்பெற்றது.
இவ்வாரம் பரிசோதனைக்கு உட்படாத ஏனையவர்களுக்கு அடுத்த வாரம் இங்கு தொடர்ந்து இந் நடமாடும் மருத்துவ முகாம் நடைபெறும் என தொற்றா நோய் வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி ஒஸ்மன்ட் டெனி அவர்கள் தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)