மன்னார் பொலிஸ் வலையில்  16 கிலோ கேரளா கஞ்சாவுடன் இரு சந்தேக நபர்கள் சிக்கினர்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மன்னார் பொலிஸ் வலையில் 16 கிலோ கேரளா கஞ்சாவுடன் இரு சந்தேக நபர்கள் சிக்கினர்

மன்னார் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து பொலிசார் மேற்கொண்ட திடீர் சோதனைகளில் இரு வேறு இடங்களில் கேரளாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கஞ்சா பொதிகளை மன்னார் பொலிசார் கைப்பற்றியுள்ளதுடன் இருவரையும் சந்தேகத்தின் நிமித்தம் கைது செய்தள்ளனர்.

இச்சம்பவம் வெள்ளிக்கிழமை (31) மன்னார் நகர் பகுதியிலும் மன்னார் தலைமன்னார் வீதியிலும் இடம்பெற்றுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக பொலிசார் தெரிவித்ததாவது;

மன்னார் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து மன்னார் கொன்வன்ற் வீதி மற்றும் தலைமன்னார் வீதி எஸ்.ரி.எவ். கேம்ப்க்கு அருகாமையில் வைத்து இரு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பொலிசார் நடாத்திய சோதனையிலேயே இருவர் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்

சம்பவம் அன்று (31) மன்னார் மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து மன்னார் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொன்வன்ற் வீதி மற்றும் மன்னார் தலைமன்னார் வீதியில் மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்ச்சகர் துல்சான் நாகாவத்தவின் பணிப்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஆர். ரத்நாயகவின் வழிகாட்டலில் பொலிஸ் சாஜன் 36501 ரத்ன மணல தலைமையிலான பொலிஸ் குழுவினர் அப்பகுதிகளில் நடத்திய தேடுதல் வேட்டையில் மன்னார் Nஐஆர்எஸ் வீட்டுத் திட்டம் சின்னக் கடையினை சேர்ந்த 37 வயது நபரிடமிருந்து 6 கிலோ 30 கிராம் கேரளா கஞ்சாவும் அதனைத் தொடர்ந்து கட்டுக்காரன் குடியிருப்பினை சேர்ந்த 28 வயது நபரிடமிருந்து தலைமன்னார் வீதியில் போலரோ கேப் வாகனத்தின் 10 கிலோ 60 கிராம் கேரளா கஞ்சாவும் கைப்பெற்றப்பட்டுள்ளது.

கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இச்சந்தேக நபர்களிடம் பொலிசார் மேலதிக விசாரணை மேற்கொண்ட பின் கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா மற்றும் சந்தேக நபர்கள் வாகனங்கள் மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மன்னார் பொலிஸ் வலையில்  16 கிலோ கேரளா கஞ்சாவுடன் இரு சந்தேக நபர்கள் சிக்கினர்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)