மன்னார் பேசாலை சென் மேரிஸ் வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டிகள்.

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மன்னார் பேசாலை சென் மேரிஸ் வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டிகள்

கடந்த இரு வருடங்களாக நாட்டில் நிலவிய கொவிட் தொற்று நோய் மற்றும் பொருளாதார சிக்கல் காரணமாக வருடந்தோறும் பாடசாலைகளில் நடைபெற்று வந்த இல்ல விளையாட்டு மெய்வல்லுனர் போட்டிகள் நடைபெறாத நிலையில் இந் நடப்பு வருடம் (2023) வழமைபோன்று இவ்வில்ல மெய்வல்லுனர் போட்டிகள் மன்னார் மாவட்ட பாடசாலைகளில் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன.

இந்த வகையில் மன்னார் கல்வி வலயத்தில் ஆரம்ப பாடசாலையாக உயர்ந்த நிலையில் இருக்கும் மன்.பேசாலை சென்.மேரிஸ் வித்தியாலயத்தில் புதன்கிழமை (22.03.2023) இவ்வில்ல விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றன.

இவ் வித்தியாலயத்தின் அதிபர் எஸ். இராஜேஸ்வரன் பச்சேக் தலைமையில் நடைபெற்ற இவ் விளையாட்டுப் போட்டி நிகழ்வுக்கு மன்னார் பிரதேச செயலாளர் எம். பிரதீப் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

அத்துடன் மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் செல்வி ஜே.டி. தேவராஜா, மன்னார் கோட்டக் கல்விப் பணிப்பாளர் பி. சந்தியோகு, பேசாலை உதவி பங்குத் தந்தை அருட்பணி டிக்சன் அடிகளார், பேசாலை மக்கள் வங்கி முகாமையாளர் எ. கமல்ராஜ் பெர்னாண்டோ, முன்னாள் அதிபர் எஸ். பொஸகோ குரூஸ் மற்றும் பேசாலை பங்கு சபைச் செயலாளர் சீ. மெக்லஸ் பெர்னாண்டோ உட்பட பல முக்கியஸ்தர்கள், அதிகமான பெற்றோர்கள் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மன்னார் பேசாலை சென் மேரிஸ் வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டிகள்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)