மன்னார் தீவில் மின் காற்றாலை விரிவாக்கம் மக்கள் மத்தியில் பேரியிடி

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மன்னார் தீவில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கும் மின் காற்றாலைகளால் இங்கு சுற்றாடல் மாத்திரமல்ல பெரும் தொகையான மீனவ சமூகம் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருவதாகவும் மன்னார் தீவு அழிவுக்கு உட்படும் அபாயம் தோன்றியுள்ளதாகவும் தெரிவித்து அன்று தொட்டு இன்றுவரை பலதரப்பட்டவர்களும் மகஜர்கள், கருத்தமர்வுகள், கண்டனப் பேரணிகள் என நடத்தப்பட்டு வருகின்போதும், தற்பொழுது அரசும் சம்பந்தப்பட்டவர்களும் இவற்றை கவனத்துக்கு எடுக்காது மீண்டும் தொடர்ந்து மன்னார் தீவில் காற்றுச் சக்தி செயற்திட்டத்தின் முதலாம் கட்ட விரிவாக்கமாக கொள்ளளவை மேம்படுத்துவதற்கான திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

இத் திட்டம் தொடர்பாக பொது மக்களின் கருத்துக்களை 30 தினங்களுக்குள் கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கு அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

இச் செய்தியைக் கேட்டதும் மன்னார் தீவிலுள்ள முக்கிய பிரதிநிதிகள் மன்னார் தீவு தொடர்ந்து அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லகின்றது என தெரிவித்து அவசரக் கூட்டம் ஒன்றை கூட்டி மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் புதன்கிழமை (01.03.2023) ஒன்றுகூடினர்.

இக்கூட்டத்தில் இவ்விடயத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டு மன்னார் தீவிலுள்ள கிராம மக்களுக்கு விழிப்புணர்வை எற்படுத்தி இதனால் எற்படும் தாக்கங்களை பொதுமக்கள் தெரியப்படுத்துவதற்கான சூழ்நிலையை உடன் மேற்கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மன்னார் தீவில் மின் காற்றாலை விரிவாக்கம் மக்கள் மத்தியில் பேரியிடி

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)