
posted 30th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offe
மன்னாருக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட ஆசீர்வாதம் அழிக்கப்படுகின்றது
மன்னார் மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட ஆறுகள் சட்டவிரோத மணல் அகழ்வினால் அழிந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றது என தாழ்வுபாடு பங்குத் தந்தையும், சமூகப் பணியில் ஈடுபட்டு வருபவருமான அருட்பணி எஸ். ஜெயபாலன் குரூஸ் அடிகளார் தெரிவித்தார்.
மன்னாரில் தற்பொழுது இடம்பெற்று வரும் சட்டவிரோத மண் அகழ்வைக் கண்டித்து இன்று வியாழக்கிழமை (30) மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஆதரவில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட அருட்பணி எஸ். ஜெயபாலன் குரூஸ் அடிகளார் ஊடகங்களுக்கு தனது கருத்தைத் தெரிவி;க்கையில்;
மன்னார் மாவட்டம் வட மாகாணத்திலேயே பல ஆறுகளைக் கொண்ட இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு மாவட்டமாகும்.
கல்லாறு, அருவியாறு , பாலியாறு . சிப்பியாறு , பூங்கொடியாறு , பறங்கியாறு , கொடிகட்டியாறு, கல்பாடியாறு இதைவிட பல கிளை ஆறுகளையும் கொண்ட மாவட்டமாகும்.
இவைகள் மண்ணுக்கு வளத்தையும், விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தையும் கொடுத்து வருகின்றன.
ஆனால், கடந்த சில வருடங்களாக இந்த ஆறுகளில் சட்டவிரோத மணல் அகழ்வினால் இந்த ஆறுகள் பாழடைந்து கொண்டே போகின்றன.
அதுமட்டுமல்ல, இந்த ஆறுகளுக்கு அருகாமையிலுள்ள கணிசமான எண்ணிக்கையான பெரிய மரங்கள் நில ஆதாரம் குறைந்த நிலையில் வீழ்கின்றன. இவ்வாறான மரங்களின் இழப்புகளினால் மழை வீழ்ச்சி குறைகின்றது. மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகின்றது.
இவ்வாறான சட்டவிரோத மணல் அகழ்வினால் மன்னார் தீவிற்குப் பங்கம் ஏற்படுமோ என்று அச்சமாக உள்ளது. மேலும், இச்
ஆகவே சம்பந்தப்பட்ட உயர் மட்டம் இவ்விடயத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என நாங்கள் மக்கள் சார்பில் கேட்டு நிற்கின்றோம் என இவ்வாறு தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)