மக்கள் காலடிக்கு தவிசாளர் மாஹிர்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் தவிசாளராகப் பதவி ஏற்றதிலிருந்து மக்களின் காலடிக்கே சென்று பிரச்சினைகளைக் கேட்டறிந்து வருவதுடன், பிரச்சினைகளுக்கு கணிசமான தீர்வுகளையும் வழங்கி வருகின்றார்.

இந்த செயற்பாடுகள் மூலம் தவிசாளர் மாஹிர் உள்ளுராட்சிமன்றம் ஒன்றின் தவிசாளர் பதவிக் கதிரையில் அமர்ந்திருப்பதோடு நின்று விடாது மக்களைத்தேடிச் சென்று கடமை நிறைவேற்றும் உதாரண புருசராகச் செயற்படுவதாக சம்மாந்துறைப் பிரதேச மக்கள் பெரும் பாராட்டுத் தெரிவிக்கின்றனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினரான தவிசாளர் மாஹிர் அக்கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளராகவும் இருந்து வருகின்றார்.

இலங்கை வெளிநாட்டு அமைச்சின் ஐ.நா.பிரிவில் மனித உரிமைகள் ஆராய்ச்சி உதவியாளராகப் பணியாற்றி ஐ.நாவுக்கான அறிக்கை தயாரிப்புக்குழு உறுப்பினர்களுள் ஒருவராகவும் திகழ்ந்துள்ளார்.

அண்மையில் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளராக இருந்து வந்த ஏ.எம். நௌஸாத் இராஜினாமாச் செய்ததை அடுத்து புதிய தவிசாளராக ஐ.எல்.எம். மாஹிர் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து தவிசாளர் மாஹிர் தமது பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட பல்வேறு பின்தங்கிய பிரதேசங்களுக்கும், உரிய அதிகாரிகள் சகிதம் நேரில் சென்று மக்கள் பிரச்சினைகளைக் கேட்டறிந்து வருவதுடன், முடியுமான வரை உடனடித் தீர்வுகளையும் வழங்கி வருகின்றார்.

சம்மாந்துறையில் அமைந்துள்ள ஜனாதிபதி விளையாட்டுத் தொகுதி பொதுநூலகம் போன்ற முக்கிய இடங்களுக்கும் நேரில் சென்று அபிவிருத்தி மற்றும் குறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்ததுடன், பிரதேச வர்த்தகர்கள், மீனவர்களுட்பட குறிப்பாக விவசாயிகள் தொடர்பிலும் செயல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.

பல பிரதேசங்களிலுள்ள கிராமத்தின் முக்கிய ஜும்ஆப்பள்ளி வாசல்கள், பொது அமைப்புக்களுக்கும் சென்று அவ்வப் பிரதேசங்களின், பொது மக்களின் நலன் சார்ந்த விடயங்களையும் தேவைகளையும் கேட்டறிந்து வரும் அவர் சில விடயங்களுக்கு உடனடித் தீர்வுகளையும் வழங்கி வருகின்றார்.

பதவியேற்றது முதல் தினமும், மக்கள் குறைகளைக் கேட்டறியவும், தீர்வுகளை ஏற்படுத்தவும் கள விஜயங்களைத் தொடர்ந்து வரும் தவிசாளர் மாஹிரின் இலட்சிய வேட்கையுடனான இத்தகைய மக்கள் சேவை பெரும் வரவேற்பைப் பெற்று வருவதுடன், பிரதேசத்தின் தலைமகன் என்ற பொறுப்பு வாய்ந்த பதவிக்கு முன்னுதாரணமாகவும், இலக்கணமாகவும் அவர் செய்பட்டு வருவதாகவும் பிரதேச மக்கள் உட்பட பல்வேறு பொது அமைப்புகளும் பாராட்டும் நன்றியும் தெரிவித்து வருகின்றன.

தவிசாளர் மாஹிரின் மக்கள் சேவை தொடர்பிலான உத்வேகம் பலரையும் அவர் பக்கம் ஈர்த்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மக்கள் காலடிக்கு தவிசாளர் மாஹிர்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)