
posted 10th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
மகளிர் தின சுவரொட்டி!
சர்வதேச மகளிர் தினத்தையொட்டிய சுவரொட்டி ஒன்று நாடளாவிய ரீதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
போராட்டத்திற்கு மகளிரை அழைக்கும் வகையிலான இந்த சுவரொட்டியில், இன்றைய கால கட்டத்தில் நாட்டில் பற்றி எரியும் முக்கிய பிரச்சினைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
சர்வதேச மகளிர் தினம் - 2023 எனும் தலைப்பிடப்பட்டுள்ள இந்த சுவரொட்டியில்,
“பெண்களே! வரிச்சுமையை, விலைவாசியை, மின்கட்டணத்தை அதிகரித்து, தேர்தலைப் பிற்போட்டதற்கு எதிராகப் போராடுவோம் - உரிமைகளுக்காகப் பெண்கள் அமைப்பு”
எனும் வாசகங்கள் காணப்படுகின்றன.
கிழக்கிலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலும் மேற்படி சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இம்முறை சர்வேதசமகளிர் தினம் நாடளாவிய ரீதியில் மகிச் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)