
posted 8th March 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
காத்தான்குடி கடற்கரை வீதியில் மோட்டார் சைக்கிளில் 4 கிராம் 770 மில்லிக்கிராம் ஐஸ் போதைப் பொருளை எடுத்துச் சென்ற வியாபாரி ஒருவரை விசேட அதிரடிப்படையினர் மடக்கிப்பிடித்து தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவரையும், ஐஸ் போதைப் பொருள் மற்றும் மோட்டர் சைக்கிளுடன் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)