
posted 11th February 2023
பேசாலையில் கால்நடை வளர்ப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வு இடம்பெற்றது.
இக் கருத்தமர்வானது பேசாலை விவசாய சங்கத் தலைவர் அன்ரன் பல்டானோ தலைமையில் பேசாலை பொது மண்டபத்தில் வியாழக்கிழமை (09) இடம்பெற்றது.
இவ் அமரவில், மன்னார் கால்நடைப் பிரிவு கால்நடை வைத்திய அதிகாரி திருமதி ஜீசஸ்மரியா துரம் இவருடன் பேசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி கே.பி. ஹசீத்சா பீபீ மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர் எஸ்.எம். ஜவாகீர் கலந்து கொண்டதுடன் கால்நடை வளர்ப்பில் அக்கறை கொண்டவர்களும் இவ் அமரவில் பங்கு கொண்டிருந்தனர்.
இவ் அமரவில் கால்நடை வளர்ப்பின்போது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறிப்பாக கோழி வளர்ப்போர், ஆடுகள் வளர்ப்போர் எதிர்நோக்கும் பிரச்சனைகள் விரிவாக ஆராயப்பட்டது.
நாட்டில் நிலவும் பொருளாதார வீழ்ச்சியால் மக்கள் யாவரும் சுயதொழிலில் ஈடுபட வேண்டிய அவசியம் இங்கு வலியுறுத்தப்பட்டது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)