
posted 7th March 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
பெண்கள் புற்றுநோய்களுக்கான அறிகுறி தென்படும்பட்சத்தில் இதில் தாங்கள் அலட்ச்சியம் காட்டாது ஆரம்பத்திலே வைத்தியரை உடன் நாடுவதால் பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் என பெண் நோயாளர்களுக்கான புற்றுநோய் அறுவை சிகிச்சை வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி தனுஷா இவ்வாறு தெரிவித்தார்.
புற்றுநோய் தொடர்பாக பெண்களுக்கு விழிப்புணர்வு திட்டத்தை முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில் பெண் நோயாளர்களுக்கான புற்றுநோய் அறுவை சிகிச்சை வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி தனுஷா மேலும் தெரிவிக்கையில்;
பெண் புற்றுநோயில் நான்கு விடயங்கள் அடங்கியுள்ளன. சூலகம் , கற்பப்பை , கற்பப்பை கழுத்து , யோனியும் அதைச் சுற்றியுள்ள தோல் பகுதிகளும் ஆகும்.
இவற்றில் புற்றுநோய் உருவாகுமானால் நிலை ஒன்றிலோ அல்லது இரண்டிலோ இலகுவாக கண்டுபிடித்து விடலாம்.
இதை பெண்கள் தங்களது அலட்சிய தன்மையாலேயே இவற்றை கண்டு பிடிக்காமல் விட்டுவிடுகின்றார்.
கற்பப்பபையில் உருவாகும் புற்றுநோய் அதிகமாக ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே இது அதிகமாக உருவாகும். அதாவது மாதவிடாய் நின்ற பின்பே இது அதிகமாக உருவாகின்றது.
ஆகவே இந்தவேளையில் பெண்களுக்கு இரத்தபோக்கு ஏற்படுமாகில் இவற்றை அலட்சியப்படுத்தாது வைத்தியரிடம் காண்பிக்க வேண்டும்.
இதிலிருந்து நீங்கள் தவறினால் இதன் நிலை மூன்று நான்குக்கு சென்றுவிடும். இதன்பின் சத்திர சிகிச்சை செய்வது கடினமானது.
அடுத்து கற்பப்பை கழுத்து இதில் 35 வயதிலும் 45 வயதிலும் கற்பப்பை கழுத்து பரிசோதனையை ஒவ்வொரு பெண்களும் மேற்கொள்ள வேண்டும்.
இதில் எதாவது வித்தியாசமாக கலங்கல் இருக்கின்றதா எனப் பார்க்கப்படும். புற்றுநோய் வருவதற்கு முன்பே இதை கண்டு பிடித்து விடலாம்.
அடுத்து யோனி பகுதிகளில் எதாவது வித்தியாசமான முறையில் நோவு எதாவது உணரப்பட்டால் உடன் நீங்கள் வைத்தியரை நாட வேண்டும்.
புண் அல்லது காய்ச்சல் அடிக்கடி வருவதை நீங்கள் உணர்ந்தால் இதை நீங்கள் அலட்சியப்படுத்தக் கூடாது.
சூலத்தில் ஏற்படும் புற்றுநோயை கண்டுபிடிப்பது கடினம்.. இருந்தும் மேற்கூறப்பட்ட பகுதிகளில் ஏற்படும் புற்றுநோயை இலகுவாக கண்டுபிடித்துவிடலாம். ஆகவே பெண்கள் இந்த விடயத்தில் அலட்சியமாக இருக்காது செயல்படுவதே சாலச் சிறந்தது என வைத்திய கலாநிதி தனுஷா தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)