
posted 23rd March 2023
தூங்கிடும் நம் உறவுகளின் துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
புனித ரமழான் முதல் நோன்பு
இலங்கை முஸ்லிம்கள் புனித நோன்பினை நாளை (24) வெள்ளி முதல் ஆரம்பிக்கவுள்ளனர்.
ரமழான் மாதத்திற்கான தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நேற்று (22) புதன் கிழமை மாலை மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றது.
பிறைக்குழுத் தலைவர் மௌலவி. எம்.பி.எம். ஹிஸாம் பத்தாஹி தலைமையில் இடம்பெற்ற இந்த மாநாட்டின் போது தலைப்பிறை நாட்டின் எந்தப் பாகத்திலும் தென்பட்டதாக ஊர்ஜிதம் செய்யப்படாததால், ஷஃபான் மாதத்தை முப்பதாகப் பூர்த்தி செய்து ரமழான் முதல் நோன்பை நாளை வெள்ளிக்கிழமை (24) ஆரம்பிப்பதென கொழும்பு பெரிய பள்ளிவாசல் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளுள் ஒன்றான நாளை ஆரம்பமாகும் புனித நோன்பை முஸ்லிம்கள் நாளை முதல் முப்பது தினங்கள் அனுஷ்டிப்பதுடன், முப்பது தினங்கள் நோன்பு நிறைவு பெற்றதும் ஈதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாளை இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் கொண்டாடவுள்ளனர்.
ஈகையின் சிறப்பை எடுத்தியம்பும் நோன்பு மாதத்தை வரவேற்கும் வகையில் முஸ்லிம் பிரதேசங்களில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், பள்ளிவாசல்களில் விசேட பயான்களும் (பிரசங்கங்கள்) இடம்பெற்று வருகின்றன.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)