பிரதிஷ்டை செய்யப்பட்ட 27 அடி உயரமான நடராஜர் சிலை

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

பிரதிஷ்டை செய்யப்பட்ட 27 அடி உயரமான நடராஜர் சிலை

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை தீர்மானத்துக்கு அமைவாக நடராஜர் பணிக் குழுவினால் ஆனையிறவுப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 27 அடி உயரமான நடராஜர் சிலை நேற்று ஞாயிறு (12) முற்பகல் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது.

ஆனையிறவுப் பகுதியில் பிரதான வர்த்தக மையம், பாரம்பரிய உணவகம், எரிபொருள் நிலையம், நவீன குளியலறை, விளையாட்டு முற்றம், கடற்கரை உல்லாச விடுதி மற்றும் உணவகம், வங்கி வசதிகள் என்பவற்றுடன் கூடிய ஆனையிறவு வணிக சுற்றுலா மையத்தை நிறுவும் திட்டமிடல் வரைபடத்தின் அடிப்படையில் முதலாம் கட்டப் பணிகள் நிறைவு பெற்று அங்கு நிறுவப்பட்ட சுமார் 27 அடி உயரமான நடராஜர் சிலை நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணிக்கு பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் இந்து மத சிவாச்சாரியார்கள், பாராளமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மா.வை. சேனாதிராசா, செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

பிரதிஷ்டை செய்யப்பட்ட 27 அடி உயரமான நடராஜர் சிலை

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)