பாரம்பரிய வைத்தியர்களுக்கான செயலமர்வு

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

பாரம்பரிய வைத்தியர்களுக்கான செயலமர்வு

கொழும்பு சுகாதார அமைச்சின் சுதேச வைத்தியப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட, பாரம்பரிய வைத்தியர்களுக்கான 5 நாள் பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பு - புதுக்குடியிருப்பு சித்த தள ஆயுள்வேத வைத்தியசாலை மண்டபத்தில் ஆரம்பமாகியது.

கொழும்பு சுதேச வைத்தியப் பிரிவின் தலைவர் பி. தயாநந்தன் தலைமையில் ஆரம்பமான இச்செயலமர்வில், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ. ஸ்ரீதர், கல்முனை பிராந்திய ஆயுள்வேத இணைப்பாளரும் வைத்திய அத்தியட்சகருமான வைத்தியர் எம்.ஏ. நபீல், அமைச்சின் சுதேச வைத்தியப் பிரிவின் வைத்தியர் சி. சிவகுமார், கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள திட்டமிடல் பிரிவு வைத்தியர் எஸ். சதீஸ் உள்ளிட்ட வைத்தியர்களும், கிழக்கு மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத பாரம்பரிய வைத்தியர்கள், அமைச்சின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

ஆரம்பநாள் பயிற்சியின் வளவாளர்களாக கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி இ. சிறிதர் கலந்துகொண்டு பாரம்பரிய மருத்துவத்தின் வரலாறும், இன்றைய நிலை பற்றியும் தெளிவான விளக்கப் பயிற்சியினையும், கல்முனை பிராந்திய ஆயுள்வேத இணைப்பாளரும் வைத்திய அத்தியட்சகருமான வைத்தியர் எம்.ஏ. நபீலினால் இன்றைய உணவு முறைகளும், அதன் ஆரோக்கியம் பற்றிய விளக்க பயிற்சியையும் வழங்கினர்.

கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத பாரம்பரிய வைத்தியர்களின் அறிவுத்திறன்களை மேம்படுத்தும் நோக்கிலும், அவர்களின் வைத்திய முறைகளை எவ்வாறு கடைப்பிடித்துச் செல்லவேண்டும் என்ற பயிற்சிகளும் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பாரம்பரிய வைத்தியர்களுக்கான செயலமர்வு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)