பல்சமய மக்களும் ஒற்றுமையை கட்டிக்காத்தால் தீய சக்தி நெருங்க அச்சம்; கொள்ளும்.

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

பல்சமய மக்களும் ஒற்றுமையை கட்டிக்காத்தால் தீய சக்தி நெருங்க அச்சம்; கொள்ளும்.

மட்டக்களப்பு பல் சமய ஒன்றியம் ஊடக சந்திப்பு ஒன்றை மேற்கொண்டது.

இதன்போது மட்டக்ளப்பு மாலட்ட பல் சமய ஒன்றியத்தின் தலைவர். சிவஸ்ரீ விக்ணேஸ்வரன் குருக்கள் கருத்து தெரிவிக்கையில்

மட்டக்களப்பு பல்சமய ஒன்றியத்தின் சார்பாக தெரிவிப்பதாவது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து இன மத ஒற்றுமையின் ஐக்கியத்தையும் உண்டு பண்ணுவதற்காக நாங்கள் இந்த வாரத்தை முக்கியமான வாரமாக இதனை தெரிவு செய்திருக்கின்றோம்.

இப்பொழுது உள்ள கால சூழ்நிலையில் அனைத்து மதங்கள் சார்ந்த நல்ல நிகழ்வுகளும் இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்றன.

இந்துக்களுக்கான பண்டிகை காலம் இடம்பெறுவதுபோல கிறிஸ்தவர்களுக்கு தவக்காலம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

அதுபோல முஸ்லீம் மக்களுக்கான நோம்பு காலமும் ஆரம்பிக்கப்பட்டு இப்பொழுது அவர்கள் இதை அனுஸ்சரித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

அனைத்து இன மதம் சார்ந்த மக்களும் ஒற்றுமையாகவும் ஐக்கியத்துடனும் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்று மட்டக்களப்பு மக்கள் மாத்திரம் அல்ல அனைத்து இலங்கை வாழ் மக்களும் இருக்க வேண்டும் என்று கேட்டு நிற்கின்றோம்.

இதைத் தொடர்ந்து கிழக்கு மாகாண பல் சமய ஒன்றிய செயலாளர் அருட்பணி கந்தையா ஜெகதாஸ் அடிகளார் தெரிவிக்கையில்

மட்டக்களப்பு பல் சமய ஒன்றியமானது 1984 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு அன்று தொட்டு இன்றுவரை பல் சமய பல்லிண மக்களின் சமாதான சகவாழ்வுக்காகவும் மானிட உரிமைகள் மனிதாபிமான நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வு நீதி சமாதான செயல்பாடுகளுக்காகவும் பிரதான சமயத்தவர்களாகவும் பல் சமயத் தலைவர்களாகவும் ஒன்றிணைந்து ஐக்கியத்துடனும் சகோதரத்துவத்துடனும் இந்நாட்டில் சிறந்ததோர் அமைப்பாக செயல்பட்டு வருகின்றோம்.

அன்மைகாலமாக வடக்கு கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் சமயத்தின் பெயரால்; முரன்பாடான கருத்தக்களும் கடந்த இரு தினங்களுக்கு முன் வெடுக்கினார்மலையில் இந்து மத விக்கிரங்கள் தகர்ப்பு குறித்த நிலையையிட்டு நாங்கள் ஆழ்ந்த கவலை அடைகின்றோம்.

இங்கு நாங்கள் யாவரும் ஒருதாய் மக்களாகவே வாழ்ந்து வருகின்றோம். எம்மிடையே பல சமயங்களும் சமயம் சார்ந்த நம்பிக்கை உடையவர்களும் வாழ்ந்து வந்தாலும் நாங்கள் ஒவ்வொரு சமயத்தையும் மதித்து ஐக்கியத்துடன் இருந்து வருகின்றோம்.

இருந்தும் சில தீய சக்திகள் எம்மிடையே பிளவுகளை எற்படுத்தி குழப்பங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இருந்தும் அவர்களுக்கு அது வெற்றியளிக்காமலும் போயிருக்கின்றது.

யாருக்கும் எந்த சமயத்தையும் விமர்சிக்கவும் இழிவுப்படுத்தவும் உரிமை இல்லை. ஒவ்வொரு சமயமும் ஒழுக்கமுள்ள மனிதர்களாக இருக்கவே வலியுறுத்தி வருகின்றது.

கடந்த 75 வருடங்களாக இலங்கையில் இன முரன்பாடாகவும் 30 வருடங்கள் போரினால் பாதிக்கப்;பட்டு சொல்லொண்ணா துன்பங்களையும் ஈடுசெய்ய முடியாத உயிர் இழப்புக்களையும் கொண்டவர்களாக இருக்கின்றோம்.

சுதந்திரமற்ற மக்களாக வாழ்ந்து வரும் நாம் தற்பொழுது பொருளாதார நெருக்கடிகளும் போதைப் பொருட்களுக்கு அடிமைகளாக உள்ளாகி வரும் நிலையிலும் இருந்து வருகின்றோம்.

இந்த நிலையில் சமய முரன்பாடுகள் ஏற்படுமாகில் மேலும் நாட்டில் பெரும் பாதிப்புக்களையே உருவாக்கும்.

ஆகவே நாம் தொடர்ந்து எமது ஐக்கியத்தையும் சமய இன ஒற்றுமையை பாதகாத்துக் கொள்ள மட்டக்களப்பு பல் சமய ஒன்றியம் மட்டக்களப்பு மக்கள் யாவரையும் வேண்டி நிற்கின்றது.

மட்டக்களப்பு பல் சமய ஒன்றி உப தலைவர் மௌலவி சாஜ்ஜஹான் ஊடக சந்திப்பில் தனது கருத்தை தெரிவிக்கையில்

மட்டக்ளப்ப பல் சமய ஒன்றியம் என்ன செய்கின்றது? என்ற கேள்வி மக்கள் மத்தியில் தோன்றலாம்.

இந்த மாவட்டத்தில் சிறுபான்மை மக்கள் அதிகமாக வாழ்கின்றார்கள்.

எம்மிடையே ஒற்றுமையும் முரன்பாட அற்றத் தன்மையும் நல்ல மத இனக்கங்கங்கள் ஏற்படும்போதுதான் பெரும்பான்மை எமக்கு எதையும் செய்ய முடியாது திண்டாடும்.

ஆனால் நாம் பிரிந்திருந்தால் பெரும்பான்மை எம்மை சுலமாக இக்கட்டான நிலைக்கு தள்ளிவிடும்.

ஆகவே இந்த மாவட்டத்தில் உள்ள சகல துறையினரும் பல் சமய ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என இவ்வாறு தெரிவித்தார்.

பல்சமய மக்களும் ஒற்றுமையை கட்டிக்காத்தால் தீய சக்தி நெருங்க அச்சம்; கொள்ளும்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)