பலவகைச் செய்தித் துணுக்குகள்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

பலவகைச் செய்தித் துணுக்குகள்

மட்டுவில் பன்றி தலைச்சி அம்மன் ஆலய வருடாந்தத் திருவிழா

வரலாற்று சிறப்புமிக்க மட்டுவில் பன்றி தலைச்சி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பங்குனி திங்கள் திருவிழா இன்று.20ஆம் திகதி ஆரம்பம்.

நேற்று (20) அதிகாலை பக்த அடியவர்கள் அம்மனுடைய தீர்தக் கேணியில் நீராடி பன்றி தலைச்சி அம்மனுக்கு பொங்கல் பொங்கியும் அம்மனுக்கு பிடித்த உணவான கஞ்சி சமைத்தும் தங்களுடைய நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி இருந்தனர்.

அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, வாழ்த்து தோத்திரம் என ஆகம முறைப்படி வசந்த மண்டப பூஜை ஆரம்பமாகி பன்றித் தலைச்சி அம்மன் உள்வீதியுலா வருகை தந்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்திருந்தார்.

யாழ் மட்டுவில் பன்றித்தலச்சி அம்மன் ஆலயத்திற்கு நாட்டின் அனைத்து பாகங்களிலும் இருந்து பக்த அடியவர்கள் வருகை தருகின்றமையினை அவதானிக்க முடிகின்றது.


பலவகைச் செய்தித் துணுக்குகள்

எந்நேரத்திலும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறலாம் - டக்ளஸ்

நிதி ஏற்பாடுகள் சீரானால் எந்நேரத்திலும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடும் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இந்த கலந்துரையாடல் இன்று முற்பகல் இடம்பெற்றது.

இதன் பின்னர் உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைவது பற்றி ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.



தங்கை கர்ப்பமாகினார் - சந்தேகத்தில் சகோதரன் கைது

தங்கையை கர்ப்பமாக்கினார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட அண்ணனை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அச்சுவேலியை சேர்ந்த 22 வயது நபரே இவ்வாறு மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த நவம்பர் மாதம், சிறுமி கர்ப்பமடைந்த நிலையில் அவரின் தாய் வைத்தியசாலைக்கு அழைத்து சென்று கருவை அழிக்க முற்பட்டுள்ளார். இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு மருத்துவமனை பொலிஸார் தகவல் அளித்தனர். சந்தேகத்தின் அடிப்படையில் சிறுமியின் சகோதரன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


எரிபொருள் நிலையத்தில் மிரட்டல் விடுத்தவர்கள் கைது

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக் குட்பட்ட கைதடி பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கு மிரட்டல் விடுத்த இருவர் 17.03.2023 காலை சாவகச்சேரிப் பொலிஸாரால் கைது செய்யப்பட் டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திருத்த வேலை இடம்பெற்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் எரிபொருள் வழங்காமையைக் காரணம் காட்டி ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து விட்டு சென்றிருந்தனர். இந்நிலையில் சி.சி.ரி.வி கமெராவினை ஆதாரமாகக் கொண்டு இதுதொடர்பாக வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நல்லூர் மற்றும் அரியாலைப் பகுதியயைச் சேர்ந்த இருவர் இவ்வாறு கைது செய்யப் பட்டிருப்பதுடன், மிரட்டல் விடுப்பதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றி மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



18-03-2023
ஊடக அறிக்கை

மலையகத் தமிழ் மக்களை “இலங்கை வாழ் இந்தியத் தமிழர்" என குறிப்பிடுவது திட்டமிட்ட உள்நோக்கமுடையது. புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி.

இந்த நாட்டுக்கு மலையக தமிழ் மக்கள் கொண்டு வரப்பட்டு இருநூறு வருடங்கள் ஆகின்ற நிலையில் மலையக மக்களின் தேசிய இன உரிமைகளை மறுக்கும் விதமாக அவர்களை "இலங்கை வாழ் இந்தியத் தமிழர்" என்று அழைப்பதை புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

யாழ் நண்பர்கள் அமைப்பு இந்திய தூதரகத்துடன் இணைந்து மலையக தேசிய இனத்தை "இலங்கை வாழ் இந்தியத் தமிழர்" என்று குறிப்பிட்டிருப்பது ஒரு வரலாற்று மோசடியாகும்.

இந்திய மேலாதிக்கத்தின் விஸ்தரிப்பிற்காக யாழ் நண்பர்கள் அமைப்பு மலையக தேசிய இனத்தை கொச்சைப்படுத்தி அவர்களின் தேசிய இன அடையாளத்தை மறுத்துச் சிறுமைப்படுத்துவது கண்டனத்துக்குரியதாகும் என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச்செயலாளர் சி.கா. செந்திவேல் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது,

மலையக மக்கள் 1823 ம் ஆண்டு தொடங்கி பல்வேறு காலகட்டங்களில் தென் இந்தியாவிலிருந்து கொலனித்துவ கூலி அடிமைகளாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு இருநூறு ஆண்டுகள் இவ்வருடத்துடன் நிறைவடைகிறது. தொழிற்சங்கங்கள், முற்போக்கு அமைப்புகள், இடதுசாரி சக்திகள், புத்திஜீவிகள் எனப் பலரும் மலையக மக்களின் தீர்க்கப்படாமல் இன்றும் தொடரும் பிரச்சனைகள் பற்றி குரல் கொடுத்து வருகிறார்கள். மலையக மக்களின் தனித்துவத்தை வலியுறுத்தி வருகிறார்கள், இச்சூழலில் இலங்கை வாழ் இந்திய தமிழர் என அடையாளப்படுத்துவது பல்வேறு உள்நோக்கங்களை கொண்டதாகும்.

புதிய ஜனநாயக மாக்சிச லெனின் கட்சி மலையக மக்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற போராட்டத்தை நெடுங்காலமாக முன்னெடுத்துவருகிறது. மலையக மக்களை நான்கு தேசிய இனங்களில் ஒன்றாக அங்கீகரிக்கும் படி அரசிடம் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன் வைத்துள்ளது. 1990கள் தொடக்கம் இந்தக் கோரிக்கைக்காகப் போராடும் நாம் நல்லாட்சி என சொல்லப்பட்ட அரசாங்க காலத்தில் கட்சி சமர்பித்த யாப்பு சீர்த்திருத்தத்திற்கான முன்மொழிவுகளிலும் இவ்விடயத்தை ஆணித்தரமாக சுட்டிக்காட்டியிருந்தோம்.

குடியுரிமை மறுக்கப்பட்டு, காணி, வீடு, கல்விபுலம் உட்பட ஏனைய சிவில் சமூகங்களுக்கு இருக்கும் உரிமைகள் மறுக்கப்படும் ஒடுக்கப்பட்ட தேசிய இனமான மலையக மக்களை இப்போது இந்திய வம்சாவளி தமிழர் என்று விழிப்பது கண்டனத்துக்குரியது.

மலையக தேசிய இனம் இலங்கையின் பொருளாதாரத்திற்கும் அபிவிருத்திக்கும் மிகப்பாரிய பங்களிப்பை நீண்டகாலமாகவே செய்து வருகின்றனர். அவர்கள் இலங்கையின் குடிமக்கள் என்பதை புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி ஆணித்தரமாக வலியுறுத்துகிறது.

யாழ் முற்போக்கு அமைப்புகளும், பொதுமக்களும் மலையக மக்கள் மீது நிகழ்த்தப்படும் இந்த புதிய ஒடுக்குமுறைக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்ய வேண்டும். மலையக மக்கள் மீது அக்கறையுள்ள அனைவரும் இதற்கெதிராகக் குரல் கொடுக்க வேண்டியது அவசியம் என்பதோடு அனைவரும் இலங்கை மக்களாகிய மலையக தேசிய இனத்தின் உரிமைகளுக்காக போராட வேண்டும் என்று புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி அறைகூவல் விடுக்கிறது.

மத்திய குழு சார்பாக,
சி.கா. செந்திவேல்
பொதுச்செயலாளர்.
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி.



பிள்ளைகள் உயிர் பிரிந்த துக்கத்தில் மது போதைக்கு அடிமை உயிரிழந்த தந்தை

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவை சேர்ந்த மேற்படி நபரின் பிள்ளைகள் கடந்த வருடம் 5ஆம் மாதம் கடலுக்குள் மூழ்கி உயிரிழந்தனர். அன்று தொடக்கம் மன விரக்தியில் இருந்த அவர் குடிபோதைக்கு அடிமையாகி உள்ளார். இதையடுத்து கடந்த மாதம் 12ஆம் திகதி திடீர் சுவையினம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் சனி (18) அன்று உயிரிழந்துள்ளார்.



மாவட்ட அடிப்படையில் வழங்கப்படும் அனுமதிகள் ஏனைய மாவட்டத்தினை பாதிப்பதை அனுமதிக்கமுடியாது

மாவட்ட ரீதியில் வழங்கப்படுகின்ற கடற்றொழில் அனுமதிகள் ஏனைய மாவட்டத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர்களின் தொழில் முறைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தினை சேர்ந்த கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகளில் ஒரு பகுதியினர் கடற்றொழில் அமைச்சரை சந்தித்து முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

அதாவது, உள்ளூர் இழுவைமடிப் படகுகளின் செயற்பாடுகள், சிலிண்டர் பாவனை மற்றும் கம்பி பயன்பாடு போன்றவை நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை கிளிநொச்சி கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் முன்வைத்தனர்.

இந்நிலையில், குருநகர் இழுவைமடித் தொழில் முறைமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மன்னார் மாவட்டத்தில் அனுமதி வழக்கப்பட்டுள்ள சிலிண்டர் தொழில் முறை, கம்பி பயன்படுத்தல் போன்றவை மன்னார் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையூறாக இருப்பின் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


பலவகைச் செய்தித் துணுக்குகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)