பலவகைச் செய்தித் துணுக்குகள்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

ஸ்தாபிக்கப்படவுள்ள விசேட வைத்தியசாலைகள்

புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக யாழ்ப்பாணம், பதுளை, அம்பாந்தோட்டை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் விசேட வைத்தியசாலைகளையும், பொருத்தமான இடத்தில் விசேட நவீன சிறுவர் வைத்தியசாலையொன்றையும் ஸ்தாபிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மருத்துவ ஆராய்ச்சிக்கான நவீன ஆய்வுகூடம் அமைப்பது தொடர்பில் ஆராய்ந்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு குழுவொன்றை நியமிக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.



கைவசமிருந்த போதைப்பொருள்

போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் உட்பட இருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் போதைப்பொருள் விற்பனை இடம்பெற்று வருவதாக வவுனியா பொலிஸ் நிலைய போதைத் தடுப்புப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலிற்கமைய குறித்த பகுதியில் உள்ள வீடொன்றினை சோதனையிட்ட பொலிஸார் அங்கு 10 கிராம் போதைப்பொருளை மீட்டனர்.

குறித்த போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் அதே பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவரும், 26 வயதுடைய ஆண் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



வலைகளை நாசமாக்கிய இந்திய இழுவைப் படகுகள்

இந்திய இழுவைப் படகுகளால் சுழிபுரம் – காட்டுப்புலம் மீனவரின் சுமார் ஏழரை இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் நாசமாக்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.

சதாசிவம் சிறிகாந்தன் என்பவருடைய வலையே இவ்வாறு நாசமானது. இது தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில்,

நாங்கள் திங்களன்று (27), நேற்று முன்தினம் இரவு, கடலுக்கு சென்றோம். வலையை கடலில் விட்டுவிட்டு இருந்தவேளை சுமார் 300 இந்திய இழுவைப் படகுகள் எங்கள் கடல் எல்லைக்குள் வெளிச்சம் பாய்ச்சாது உள்நுழைந்தன.

இதன்போது எனது ஏழரை இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகளை இந்தியன் இழுவைப் படகு வெட்டி நாசப்படுத்தி சென்றன.

தற்போது மீன்பிடி பருவகாலம். வெட்டப்பட்ட வலைகளை கடன் பெற்றே வாங்கினேன். அந்த வலைகளைக் கொண்டு இரண்டு தடவைகள் மீன் பிடித்த நிலையில் மூன்றாவது தடவை மீன் பிடிப்பதற்காக சென்றபோதே இவ்வாறு நேர்ந்துள்ளது.

ஆகையால், வாங்கிய கடனை எவ்வாறு மீள செலுத்துவது எனத் தெரியாத நிலையில் உள்ளேன். இந்திய இழுவைப் படகுகளால் மீனவர்களான நாங்கள் உயிரை விடவேண்டிய சூழ்நிலைக்கு செல்ல வேண்டி உள்ளது.

அரசாங்கமும் கடற்றொழில் அமைச்சரும் எங்கள் நிலையை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை விரைவில் எடுப்பதோடு, எமக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.



முதல்வர் ஆனல்ட் பதவியை இழந்தார்

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் ஆனல்ட் இரண்டாவது தடவையாக சமர்ப்பித்த வரவு - செலவு திட்டம் நேற்று செவ்வாய் (28) 6 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. இதையடுத்து, ஆனல்ட் முதல்வர் பதவியை இழந்தார்.

வரவு - செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டமையால் சபை கலையக்கூடும் என்று கூறப்படுகின்றது. எனினும், இதில் சட்டச் சிக்கல்கள் நீடிக்கின்றன. இந்த சட்டச் சிக்கல்கள் குறித்து வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் பணிமனை ஆராய்ந்து வருகிறது. எது எப்படி இருப்பினும், இனி சபையால் முதல்வர் ஒருவரை தெரிவு செய்ய முடியாது.

இதனிடையே, உள்ளூராட்சி மன்றங்களின் ஆயுள்காலம் எதிர்வரும் 19ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது. இதனால், அக்காலப் பகுதி வரை சபை பிரதி முதல்வரின் கீழோ அல்லது ஆணையாளரின் கீழோ இயங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று விடயம் தெரிந்தவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, நேற்றைய தினம் செவ்வாய் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டாவது வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக 16 வாக்குகளும் எதிராக 22 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஒருவர் நடுநிலைமை வகித்தார். நால்வர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

வரவு - செலவு திட்டத்துக்கு ஆதரவாக இலங்க தமிழரசு கட்சி, ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் வாக்களித்தனர். மணிவண்ணன் அணி, ஈ. பி. டி. பி, தமிழர் விடுதலை கூட்டணி ஆகியவற்றின் உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.

முன்னதாக, 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தலை தொடர்ந்து தமிழரசு கட்சி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ். மாநகர சபையின் ஆட்சியை கைப்பற்றியது. தொடர்ச்சியாக இரு வருடங்கள் சமர்ப்பித்த வரவு - செலவு திட்டங்களும் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆனல்ட் பதவி இழந்தார்.

2020இல் நடந்த முதல்வருக்கான தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வி. மணிவண்ணன் ஈ. பி. டி. பி. கட்சியின் ஆதரவுடன் முதல்வரானார். இந்நிலையில், அவருக்கான ஆதரவை ஈ. பி. டி. பி. கட்சி விலக்கியது. இதனால், கடந்த ஆண்டு டிசெம்பரில் அவர் சமர்ப்பித்த இரண்டாவது வரவு - செலவு திட்டம் தோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்து ஒரு தடவையே வரவு - செலவு திட்டத்தை சமர்ப்பித்த அவர் பதவியை இராஜிநாமா செய்தார்.

இதன் பின்னர், கடந்த ஜனவரியில் முதல்வர் தெரிவு இடம்பெற்றபோது போதுமான உறுப்பினர்கள் சபையில் இருக்கவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டது. எனினும், ஆனல்ட் முதல்வராக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் இரண்டாவது தடவையாக பதவியேற்ற ஆனல்ட் கடந்த பெப்ரவரி 13ஆம் திகதி சமர்ப்பித்த வரவு - செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டது. இந்த நிலையில், இரண்டாவது தடவையாக அவர் சமர்ப்பித்த வரவு - செலவு திட்டமும் தோற்கடிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.


பலவகைச் செய்தித் துணுக்குகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)