நெல்லியடி கொலியன்ஸ் விளையாட்டு மைதானத்தில் 75வது சுதந்திர தினம்

இலங்கை 75வது சுதந்திர தினம் அன்றைய தின நெல்லியடி கொலியன்ஸ் விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

இலங்கை ராணுவத்தின் 55 ஆவது படைப்பிரிவு ஏற்பாட்டில் இடம்பெற்ற 75வது சுதந்திர தின நிகழ்வில் யாழ் மாவட்ட இராணுவ தளபதி மற்றும் 55வது படைப்பிரிவு தளபதி, இராணுவ அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள் வடமாட்சி வடக்கு பிரதேச செயலாளர் ஆழ்வார் பிள்ளை சிறி, கரவெட்டி பிரதேச செயலாளர் தயாரூபன் உட்பட பலரும் கலந்து கொண்டதுடன் பருத்துத்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கருவட்டி பிரதேச செயலக, உத்தியோகத்தர்கள் ராணுவம், போலீஸ் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இராணுவத்தினராலும், மாணவர்களாலும் அணிவகுப்பு மரியாவைகளும் இடம் பெற்றது. இதில் தேசிய தேசியக் கொடியினை யாழ் மாவட்ட இராணுவ தளபதி ஏற்றி வைத்தார்.. அவர்களுடன் வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர், கரவெட்டி பிரதேச செயலாளர் கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோர் இணைந்திருந்தனர்.

நெல்லியடி கொலியன்ஸ் விளையாட்டு மைதானத்தில் 75வது சுதந்திர தினம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)