
posted 2nd March 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
மன்னார் நானாட்டான் பகுதியில் வீடுகளில் இணைக்கப்பட்டிருந்த நீர் இறைக்கும் இயந்திரங்களை திருடி வந்த சந்தேக நபர் திருடிய பொருட்களுடன் பொது மக்களின் உதவியுடன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் புதன் கிழமை (01) இராசமடு அருவி ஆற்றங்கரை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது;
நானாட்டான் பகுதியில் சில கிராமங்களில் தொடர்ச்சியாக பெறுமதிமிக்க நீர் இறைக்கும் இயந்திரங்கள் களவாடப்பட்டு வந்துள்ளன.
இந்த நிலையில் அப்பகுதி பொது மக்கள் சந்தேகத்துக்கு இடமான இராசமடு அருவி ஆற்றங்கரையில் உள்ள தோட்டப் பகுதியிலுள்ள வீட்டுப் பகுதியை சோதனைக்கு உட்படுத்தியபோது திருடப்பட்ட சில நீர் இறைக்கும் இயந்திரங்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டன.
இது தொடர்பாக பொது மக்கள் உடன் முருங்கன் பொலிசாருக்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து சந்தேக நபர் ஒருவரை திருடப்பட்டதாக கூறப்படும் இயந்திரங்களுடன் கைது செய்துள்ளனர்.
இச் சந்தேக நபரை பொலிசார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதுடன் சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட இயந்திரங்களையும் மன்னார் நீதவான் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)