தீப்பற்றிய மணல்காடு சவுக்கம் காடு அணைக்கப்பட்டது

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

தீப்பற்றிய மணல்காடு சவுக்கம் காடு அணைக்கப்பட்டது

வடமராட்சி கிழக்குமணல்காடு சவுக்கம் காடு நேற்று முன்தினம் வெள்ளி (10) இரவு 9:00 மணியளவில் திடீரென தீப்பற்றிக் கொண்டுள்ளது. இந்நிலையில் குறித்த தீ பரவல் தொடர்பாக பருத்தித்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரயந்த அமரசிங்கவின் கவனத்திற்க்கு கொண்டு வரப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்க்கு வருகை தந்த பருத்தித்துறை பொலீஸ் நிலைய பதில் பொறுப்பு அதிகாரி சேந்தன் தலமையிலான குழுவினர் பிரதேச மக்களுடன் இணைந்து அங்கிருந்து பருத்தித்துறை பிரதேச சபை, இராணுவம், உதவியுடன் இரவு 11 மணியளவில் தீ கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தீ பரவிய குறித்த பகுதியை இராணுவம் பொளீஸார் மக்கள் அனைவரும் மேலும் தீ பரவாமல் மரங்களிற்க்கு கீழிருந்த குப்பைகளை அகழ்றியும் மண்ணால் தடுப்பு அணை அமைத்தும், பிரதேச சபையின் நீர்த்தாங்கி மூலம் நீரை ஊற்றியும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தீயை கட்டுக்குள் கொண்டுவர விரைவாக செயற்பட்ட பருத்தித்துறை பொலீசாருக்கு மணல்காடு மக்கள் தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

குறித்த மணல்காடு சவுக்கம் காட்டில் விறகு வெட்டுவதற்காக விசமிகளால் தீவைத்துவிட்டு பின்னர் விறகிற்க்காக வெட்டப்படுவது நீண்ட காலமாக தொடர்ந்து வருகிறது.

தீப்பற்றிய மணல்காடு சவுக்கம் காடு அணைக்கப்பட்டது

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)