
posted 28th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
திறன் வகுப்பறையொன்று ஆரம்பம்
அனைத்துலக மருத்துவ நல அமைப்பு மற்றும் இரட்ணம் பவுண்டேசன் என்பவற்றின் நிதிப்பங்களிப்பில் இளவாலை றோமன் கத்தோலிக்க தமிழ் ஆண்கள் பாடசாலையில் திறன் வகுப்பறையொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் ஆரம்ப வைபவத்தில் ஆசிரியர்கள், மாணவர்களின் பங்குபற்றலுடன் திறன் பலகையினூடு கற்றல் கற்பித்தல் செயற்பாட்டை மிகவும் சிறப்பாக செயற்படுத்தி காட்டியமை வைபவத்தில் கலந்துகொண்ட விருந்தினர்களினால் பாராட்டப்பட்டது.
மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கற்றலில் ஈடுபட்டமை வைபவத்தில் கலந்துகொண்ட பெற்றோர்களினால் பாராட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மேற்படி இரு அமைப்புக்களும் திறன்பலகைகளை வழங்குவது மட்டுமன்றி குறித்த பாடசாலை ஆசிரியர்களைப் பயிற்றுவித்தும் வருகின்றது.
இதற்கு மேலதிகமாக வினைத்திறனுடன் செயலாற்றும் கல்வி வலயங்களுக்கு இரண்டாவது கட்டமாகவும் திறன் பலகைகளை வழங்கப்பட்டு வருகின்றன.
இப்பாடசாலையில் நடைபெற்ற ஆரம்ப வைபவத்தில் பிரதம விருந்தினராக வலிகாமம் கல்வி வலயத்தின் திட்டமிடல் பிரிவின் பிரதிக் கல்விப்பணிப்பாளர் திருமதி லாவண்யா சுகந்தன், சிறப்பு விருந்தினராக அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் இலங்கைக்கான வதிவிட பணிப்பாளர் சு. கிருஷ்ணகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)