
posted 18th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
திருவள்ளுவரின் சிலை திறப்பு விழா
யாழ்ப்பாணம் பிரதம தபாலகத்துக்கு முன்பாகவுள்ள பண்ணை சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்ட திருவள்ளுவரின் சிலை வெள்ளி (17) மாலை திறந்துவைக்கப்பட்டது.
ரில்கோ சிற்றி ஹொட்டல் நிறுவனத்தினரால் அமைக்கப்பட்ட இந்தச் சுற்றுவட்டத்தின் திருவள்ளுவர் சிலையை சொஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறுதிருமுருகன் திரைநீக்கம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வில், நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள், ரில்கோ சிற்றி ஹொட்டல் உரிமையாளர் தி. திலகராஜ், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ. சிவபாலசுந்தரன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறீசற்குணராஜா, சிவசேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன், யாழ் மாநகர பதில் முதல்வர் து. ஈசன் , யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர்களான வி. மணிவண்ணன் இ. ஆனோலட், யாழ் மாநகர ஆணையாளர் இ.த. ஜெயசீலன், வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர்,யாழ்ப்பாண மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர், மாநகர சபை உறுப்பினர்கள், ரில்கோ சிற்றி ஹொட்டல் ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)