
posted 2nd March 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
பட்டப்பகலில் சாரதியை கீழ் இறக்கி கூரிய ஆயுதத்தால் குத்திய சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று வியாழன் (02) மாலை 6 மணியளவில் கிளிநொச்சி நகரில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது.
இருவருக்கிடையில் ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் காரணமாக இம் முரண்பாடு இவ்வாறான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. தேங்காய் வியாபாரம் செய்து வந்த இருவருக்கும் இடையில் பண கொடுக்கல் வாங்கல் இருந்தது. குறித்த பாரஊர்தியின் சாரதிக்கும் கைதான நபருக்கும் இடையில் பகல் முரண்பாடு ஏற்பட்டது.
சாரதி பணத்தை திருப்பி கொடுக்காது பார ஊர்தியை செலுத்தியுள்ளார். இடைமறித்து பணத்தை கேட்டபொழுது இருவருக்குமிடையில் கருத்து முரண்பாடு முற்றியுள்ளது.
இந்த நிலையில், கத்திரி ஒன்றினால் சாரதி தாக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் காயமடைந்த சாரதி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் மேற்கொண்டவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)