ச. செவனின் காலவரை காட்டூன்கள் நூல் அறிமுக நிகழ்வு

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

ச. செவனின் காலவரை காட்டூன்கள் நூல் அறிமுக நிகழ்வு

ச.செவனின் காலவரை காட்டூன்கள் நூல் அறிமுக நிகழ்வு இன்றுசனி கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு காலை 10 மணியளவில் வீரகேசரி பத்திரிகையின் செய்திப்பிரிவு பிரதம பணிப்பாளர் ஆர் பிரபாகன் தலைமையில் கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில், பல்கலைக்கழக சமூகத்தினர், அதிபர்கள், ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்துகொள்கின்றனர். குறி்த்த நிகழ்வில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் குறிப்பிடுகையில்,

கேலிச் சித்திரங்கள் பல செய்திகளை கொண்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக பல கேலிச்சித்திர கரைஞர்கள் இருந்துள்ளனர். அதன் பின்னர் எமக்கு அவ்வாறானவர்கள் கிடைக்கமாட்டார்களா என எண்ணிணோம். இந்த காலக்கட்டத்தில் எமது மண்ணிலிருந்து இவர் உருவாகினார்.

கேலிச்சித்திரங்கள் சர்வதேசத்தில் பிரபலம் பெற்றுள்ளது. அமெரிக்காவில் வரையப்பட்டு வெளியான கேலிச்சித்திரம் ஒன்று அமெரிக்க தலைவர் கவனம் வரை சென்று மாற்றங்கள் ஏற்பட்டது. இலங்கையிலும் முக்கியமாக இடம் பிடித்துள்ளது.

கிளிநொச்சி மண்ணில் கலைக்கு என்று ஓர் ஆற்றல் உள்ளது. அதிலும் கிராமப்புறங்களில் இயல்பாகவே கலைகள் தோற்றப்பெறுகின்றன.

லசந்த என்ற பத்திரிகையாளர் தொடர்பில் வெளியான சித்திரம் பல செய்திகளை கொண்டு வந்தது. அதனால் பல கேள்விகள் எழுந்தன. அரசியலில் இவரது சித்திரங்கள் பேசப்படுகிறது.

தேர்தல் தொடர்பில் பல கேள்விகள். தேர்தல் நடக்குமா? நாட்டில் தலைவர் உள்ளாரா? அவருக்கு கீழ் உள்ள அமைப்புக்கள் இயங்குகின்றதா? என எல்லாம் சிந்திக்க வைத்துள்ளது.

கிளிநொச்சி மண் கல்வி, இலக்கியம் என பல விடயங்களால் புனைந்துள்ளது. இந்த நிலையில் நெருக்கடிகள் எம்மை சூழ்ந்துவருகிறது.

இங்கு சீமெந்து உற்பத்திக்காக ஒரு கிராமமே இல்லாமல் போகப்போகிறது. நீர் பிரச்சினை இன்று எழுந்துள்ளது என மேலும் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற ஒறுப்பினர் சிறிதரன் சிறிப்பு பிரதிகளை வழங்கி வைத்தார்.

ச. செவனின் காலவரை காட்டூன்கள் நூல் அறிமுக நிகழ்வு

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)