செபங்கள் வாழ்க்கையில் இரண்டறக் கலக்க வேண்டும்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

செபங்கள் வாழ்க்கையில் இரண்டறக் கலக்க வேண்டும்

இன்று நாம் பொருளாதாரச் சிக்கல்கள், நோய் நொடிகளுக்கு உள்ளாகி வருகின்றோம் என்றால் எமது செபங்களை வாழ்வில் இரண்டறக் கலந்து கொள்ளவில்லை என அருட்பணி அலெக்சாண்டர் பெனோ அடிகளார் தெரிவித்தார்.

கத்தோலிக்கரின் தவக்காலத்தை முன்னிட்டு ஓலைத்தொடுவாய் ஆலயத்தில் நடைபெற்ற வழிபாட்டின் போது பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் மத்தியில் அருட்பணி அலெக்சாண்டர் பெனோ அடிகளார் தியான உரையில் தெரிவிக்கையில்;

மன்னார் மறைமாவட்டத்தில், 500 வருடங்களுக்கு முன்பு, நம் மூதாதையர்கள், விசுவாசத்துக்காக தங்கள் உயிரைக் கொடுத்தவர்கள். மறைசாட்சிகள் ஆனார்கள்.

மேலும், கிறீஸ்த்தவர்களாகிய நமக்கு நமது மண், மன்னார் மண், விசுவாசத்தின் விளைநிலம் எனப் பெருமை தேடித் தந்துள்ளது. நாம் நமது விசுவாசத்தைக் அதிகரிக்க வேண்டும். அதற்காக நாம் தொடர்ந்து செபிக்க வேண்டும். செய்ய முடியாததென்ற காரியங்களை செபம் கை கூட வைக்கும்; வெற்றியையும் ஈட்டித் தரும்.
.
செபம் வழிபாடுகளிலேயே மட்டும் காணப்படுகின்றது. செபத்தை நமது வாழ்வாக்க வேண்டும்.

அம் மறைசாட்சிகள் சிந்திய இரத்தமானது இப்புனித மண்ணில் 12 அப்போஸ்தலர்களின் ஆலயங்களாக எழுந்தது.

இவ்வாறாக கிறீஸ்தவம் பலவிதமான இன்னல்களின் மத்தியில் இன்று உலகத்தின் எல்லா மூலைகளிலும் வியாபித்துள்ளது.

உதாரணங்களில் ஒரு சிலவாக,

  • ஓலைத்தொடுவாயில் இருக்கும் பாத்திலேமு ஆலயம். புனித பாத்திலேமுவை உயிரோடு அவரின் தோலை உரித்து கொன்றார்கள்.
  • இராயப்பரை எக்ஸ் வடிவில் சிலுவை அமைத்து, தலைகீழாக தொங்கவிட்டு கொன்றார்கள். புனித இராயப்பரின் ஆலயம் எருக்கலப்பிட்டியில் இருக்கின்றது.
  • தலைவெட்டிக் கொல்லப்பட்ட யாகப்பரின் ஆலயம் கட்டுக்காரன் குடியிருப்பில் இருக்கின்றது.

புனித யோசேவ் வாஸ் அடிகள், அவரின் காலத்தில் யாக்கோமே கொன்சாலஸ் வியாகுலமம் பிரசங்கத்தை படித்து எமக்கு எழுதித் தந்தவர் இந்த இடத்தில்தான் முதல் முறை இயேசுவின் திருப்பாடுகளை காண்பித்தார்.

ஆகவே, இவ் விசுவாசப் பூமியில் செபத்தை உங்கள் வாழ்க்கையுடன் கலந்து பாருங்கள், நீங்களும் இறைஅருள் பெற்று இன்புற்று வாழ்வீர்கள்.

செபங்கள் வாழ்க்கையில் இரண்டறக் கலக்க வேண்டும்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)