
posted 4th February 2023
இலங்கை சுதந்திரம் பெற்று 75வது ஆண்டை கொண்டாடிய இன்றைய தினத்தன்று (04.02.2023) மன்னாரில கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஆதரவில் காலை 09 மணிமுதல் ஒருசில மணிநேரம் நடைபெற்ற இக் கவனயீர்ப்பு போராட்டமானது மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக கலந்து கொண்டவர்கள் தங்கள் வாய்களை கறுப்புத் துணியால் கட்டியவண்ணம் தங்கள் கைகளில் விலங்கிட்டவர்களாக இப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இத் தினம் தமிழினத்தின் கரிநாள் எனவும் இச் சுதந்திர தினத்தை தமிழினம் பகிஸ்கரிக்கின்றது என தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே இக் கவனயீர்ப்பு போராட்டத்தை தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கம் முன்னெடுத்துச் சென்றது.
மன்னார் மாவட்ட செயலகத்தில் இலங்கையின் 75வது சுதந்திரத் தினம் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இக் கவனயீர்ப்பு போராட்டம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இடம்பெற்றது என்பதும் குறிப்படத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)