
posted 31st March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
சுகாதார சேவைகள் நடாத்திய திடீர் சோதனை
உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஏ.ஆர்.எம். அஸ்மி தலைமையில் கல்முனை பிரதேசத்தில் உணவு தயாரிக்கும், விற்பனை செய்யும், விநியோகம் செய்யும் உணவு நிலையங்களில் திடீர் பரிசோதனை இடம்பெற்றது. இதன்போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடைந்த உணவுகளும் கைப்பற்றப்பட்டன.
உணவங்கள் சுத்தமில்லாது இருத்தல், உணவு கையாளுகையில் முறையான ஒழுங்கின்மை, நீண்ட நாட்களுக்கு உணவுகளை குளிர்சாதனப்பெட்டிகளில் தேக்கி வைத்தல், சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களின் தரம் போன்றன கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொதுசுகாதார பரிசோதர் ஏ.எம். பாரூக் தலைமையிலான பொதுசுகாதார பரிசோதர்களினால் பரிசோதிக்கப்பட்டது.
மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடந்த உணவுகளை வைத்திருந்த மூன்று பேர் மீது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)