சிவராத்திரியை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included]

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மன்னார் மாதோட்டத்திலே பாலாவியின் கரையிலே கௌரி அம்பாள் எழுந்தருளியிருக்கும் திருக்கேதீச்சர ஆலயத்தில் இவ்வருடத்துகான மகா சிவராத்திரி பெருவிழா சனிக்கிழமை (18) காலை 5 மணிக்கு திருவனந்தல் பூசையை தொடர்ந்து விஷேட பூசை வழிபாடுகள் அபிஷேகங்கள் இடம்பெற்றன.

பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சனிக்கிழமை காலை தொடக்கம் கடும் வெயில் என்றும் பாராது பாலாவியில் நீராடிவிட்டு தங்கள் கரத்தினால் தீர்த்த காவடி எடுத்துக் கொண்டு மிக நீண்ட வரிசையாக திருக்கேதீஸ்வர ஆலயத்தில் வீற்றிருக்கும் மகாலிங்க பெருமானுக்கு அபிஷேகம் செய்தனர்.

இந்த தீர்த்தக் காவடி வழிபாடானது காலை 5.30 மணி தொடாக்கம் நடைபெற்ற வண்ணம் காணப்பட்டது.

இத்துடன் அர்ச்சனை வழிபாடுகளில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்ததையும் காணக்;கூடியதாக இருந்தது.

அத்துடன் மாலை 3 மணி முதல் விஷேட அபிஷேகமும் 4.30 மணிக்கு மகா பிரதோஷகால பூசையும் இதனைத் தொடர்ந்து நான்கு சாமப் பூசைகளும் அபிஷேகங்களும் அர்ச்சனை வழிபாடுகளுடன் மறுநாள் விஷேட பூசைகளுடன் வசந்த மண்டப அலங்கார பூசையைத் தொடர்ந்து எம்பெருமான் பாலாவிக்கு எழுந்தருளி தீர்த்த உற்சபவம் நடைபெறுவதற்கான எற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சிவராத்திரியை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)