
posted 23rd March 2023
தூங்கிடும் நம் உறவுகளின் துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
சிறப்புப் பிரதி கையளிப்பு
இலங்கை இலக்கிய வானத்தின் தங்கத்தாரகை எனப்போற்றப்படும் நாடறிந்த எழுத்தாளரும், இலக்கியத்தின் சகல துறைகளிலும் முத்திரை பதித்தவருமான, மூத்த எழுத்தாளர் எஸ். முத்துமீரான், தமது வெட்டுக்குத்துக்காலம் எனும் கவிதைத் தொகுதியின் சிறப்புப் பிரதி ஒன்றை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீனுக்குக் கையளித்தார்.
முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அம்பாறை மாவட்டத்திற்கு வருகை தந்த போது இந்த கவிதைத் தொகுதி நூல் கையளிப்பு இடம்பெற்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், மீண்டும் நிந்தவூர் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரும் பிரபல சட்டத்தரணியுமான முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதத்தின் இல்லத்திற்கு தலைவர் ரிஷாட் பதியுதீன் வருகைதந்திருந்தார்.
இதன் போது அங்கு பிரசன்னமாக விருந்த மூத்த எழுத்தாளர் எஸ். முத்துமீரானைக் கண்டதும் அவரை ஆரத்தழுவிக் கொண்ட தலைவர் ரிஷாட் அவரது இலக்கியப் பணிகளை வெகுவாகப் பாராட்டினார்.
இதனையடுத்து தலைவர் ரிஷாட் பதியுதீனுக்கு தமது அண்மைய வெளியீடான “வெட்டுக்குத்துக்காலம்” எனும் கவிதைத் தொகுதி நூலின் சிறப்புப் பிரதி ஒன்றை எழுத்தாளர் முத்துமீரான் வழங்கி கௌரவமளித்தார்.
அத்துடன் தலைவர் ரிஷாட்டுடன் வருகை தந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்றூப், முன்னாள் பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் ஆகியோருக்கும் நூலின் பிரதிகளை அவர் வழங்கினார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)