
posted 14th February 2023
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களை நீதிமன்றம் வருகை தருமாறு கூறும் பொலிஸ் கட்டளையினை இன்றைய (14) தினம் பொலிசார் வழங்கியிருந்தனர். அந்த கட்டளை சிங்கள மொழியில் மாத்திரம் இருந்ததன் காரணமாக சிங்கள மொழி தனக்கு வாசிக்கத் தெரியாது எனவும் ஆகவே இந்த கட்டளையினைத் தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தமிழில் கொண்டு வந்து தருமாறு கூறி அவர்களிடம் மீளக் கையளித்தார்.
பின்னர் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து கொண்டு வந்து கொடுத்தபோது நீதிமன்றத்திற்கு தன்னை வருவதற்கு அழைக்கும் அழைப்பை நீதிமன்றம் தான் வழங்கமுடியுமே தவிர நீதிமன்றத்திற்கு அழைக்கும் அழைப்பை பொலிசாரினால் எனக்கு வழங்கமுடியுமா என நாடாளுமன்ற உறுப்பினர் வினவிய போது பொலிசார் அமைதியாக இருந்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)