சாணக்கியனின் உரை பற்றி

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

"கல்முனை வடக்கு பிரதேச செயலகம்" என்ற பெயரில் செயலகம் ஒன்று இல்லாத நிலையில் அப்படியொன்று இருப்பதாக தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பொய் சொல்லி தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் இனக்குரோதத்தை உருவாக்குவதற்கு முயற்சி செய்வதாக ஐக்கிய காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டித்துள்ளது.

இது பற்றி ஐக்கிய காங்கிரஸ் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது,

1993ம் ஆண்டு முதல் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் இயங்குவதாக சாணக்கியன் எம் பி உரையாற்றியுள்ளார். கல்முனையில் இன்று வரை இருப்பது கல்முனை செயலகம் என்ற ஒரேயொரு செயலகம்தான். கல்முனையில் வடக்கு செயலகம் என்றோ, தமிழ் செயலகம் என்றோ, முஸ்லிம் செயலகம் என்ற செயலகங்கள் இல்லை. கல்முனை செயலகத்தின் கீழ் உப செயலகம் ஒன்றே உள்ளது.

ஆனால் ஒரு பொய்யை பல தடவைகள் சொன்னால் அது உண்மையாகிவிடும் என்ற தந்திரத்தில் இனவாத தமிழ் அரசியல்வாதிகள் தொடர்ந்தும் இப்பொய்யை சொல்லி வருகிறார்கள்.

இவ்வாறு சாணக்கியன் பேசும் போது அதற்குரிய சரியான விளக்கத்தை கொடுக்க கல்முனை முஸ்லிம்களின் அதிகபட்ச ஓட்டுப்பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் அக்கட்சி எம்பீக்களும் முன்வராதிருப்பது முஸ்லிம்களுக்கு செய்யும் துரோகமாகும்.

அத்துடன் கல்முனை மாநகர சபையில் ஐந்து உறுப்பினர்களை கொண்ட அ.இ. மக்கள் காங்கிரஸ் தலைவருக்கும் இதன் உண்மைத்தன்மை தெரியாமல் இருக்கிறாரா என்று கேட்கிறோம். முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களை ஏமாற்றி வயிற்றுப்பிழைப்பு நடத்துகிறது என்பதனால்தான் மக்கள் காங்கிரசை மாற்றீடான கட்சியாக பார்த்தோம். ஆனால் அக்கட்சியும் மு. கா போன்றே செயல்படுகின்றது.

நாய்க்கு எங்கு அடிபட்டாலும் காலை தூக்கி கத்துவது போல் நாட்டில் என்ன பிரச்சினை ஏற்பட்டாலும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கல்முனை பற்றி கத்தி நாட்டு பிரச்சினையை திசை திருப்புவர். அது போல் கல்முனை மாநகர சபை ஊழல் பற்றி நாடு பேசுகையில் தமிழ் எம்பீக்கள் இதனை திசைதிருப்புவதற்காக ரவூப் ஹக்கீமால் ஏவப்பட்டுள்ளார்களா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.

ஆகவே இனியும் இல்லாத ஒரு செயலகத்தை உள்ளது என சொல்லி தமிழ் மக்களை உசுப்பேற்றுவதை தவிர்த்து கல்முனை தமிழ் மக்களுக்காக ஐக்கிய காங்கிரஸ் கட்சியினால் பிரேரிக்கப்பட்ட "பாண்டிருப்பு, சேனைக்குடியிருப்பு செயலகம்" ஒன்றை உருவாக்க முன்வரும்படி தமிழ் கட்சிகளை நாம் கேட்டுக்கொள்கிறோம்.

சாணக்கியனின் உரை பற்றி

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)