
posted 4th March 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
தெல்லிப்பழை மகாஜன, சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரிகள் மோதிய 21ஆவது பெருந்துடுப்பாட்ட போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
'வீரர்களின் போர்' என்று வர்ணிக்கப்படும் தெல்லிப்பழை மகாஜன கல்லூரி - சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரிகள் மோதும் பெருந்துடுப்பாட்ட போட்டி நேற்று .வெள்ளிக்கி.ழமை.முன்தினம் ஆரம்பமானது.
முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மகாஜன கல்லூரி 107 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 126 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
ஸ்ரெபான் 24, கேதுஷன் 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இவர்கள் நேற்றைய தினம் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.
இருவரும் நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கினர். கேதுஷன் 25 ஓட்டங்களை எடுத்த நிலையில் கௌதமின் பந்தில் அபர்ணனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த நிதுஷன் 13 ஓட்டங்களுடன் வெளியேற, இறுதி விக்கெட்டுக்காக களமிறங்கிய கிரிசேகசன் எல். பி. டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார்.
81.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்த 181 ஓட்டங்களை எடுத்து, 74 ஓட்டங்களால் முன்னிலை வகித்தது.
ஸ்ரெபான் ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
மகாஜனவின் பந்துவீச்சில் துவாரகன் 6, றொசான் 2 விக்கெட்களையும் துளசிகன், கௌதமன் ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.
84 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடியது மகாஜனக் கல்லூரி.
அபர்ணன், துளசிகன் தொடக்கம் கொடுத்தனர். துளசிகன் 11 ஓட்டங்களுடன் வெளியேற, அடுத்து வந்த ரகசியன் முதல் பந்திலேயே ஓட்டம் எதையும் பெறாமல் நிதுஷனின் பந்தில் சீராளனிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.
பின்னர் வந்த கஜித் 15, றொசான் 11, சுமிஸ்கரன் 19 என ஓரளவுக்கு போராடினர். பின்னர் வந்த துவாரகன் நிலைக்க அபர்ணன் 136 பந்துகளில் 10 பௌண்ட்ரிகளுடன் 81 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார்.
நேற்றைய நாள் ஆட்டம் முடிவில் 65 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 223 ஓட்டங்களை குவித்திருந்தது.
துவாரகன் ஆட்டமிழக்காமல் 3 பௌண்ட்ரிகள், 2 சிக்ஸர்களுடன் 50 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஸ்கந்தாவின் பந்துவீச்சில் கஜானன் 3, நிதுஷன் 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
போட்டியின் நாயகனாக ஸ்கந்தவரோதய கல்லூரியின் ஸ்ரெபான் தெரிவானார். சிறந்த துடுப்பாட்ட வீரராக மகாஜனவின் அபர்ணன், சிந்த பந்துவீச்சாளர் மற்றும் சகலதுறை வீரராக மகாஜனவின் துவாரகன், சிறந்த களத்தடுப்பு வீரராக ஸ்கந்தவரோதயாவின் சீராளன் ஆகியோர் தெரிவாகினர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)