
posted 31st March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
சந்நிதியான் ஆச்சிரமத்தால் பொதியிடல் இயந்திரம் வழங்கல்
சந்நிதியான் ஆச்சிரமத்தால் அச்சுவேலி - சுதேச மருந்து உற்பத்திப்பிரிவுக்கு ரூபா 92,000 பெறுமதியான பொதியிடல் இயந்திரம் நேற்று (30) வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
சுதேச மருத்துவத் திணைக்களத்தின் மாகாண மருந்து உற்பத்திப் பிரிவின் அச்சுவேலி மருத்துவப் பொறுப்பதிகாரியின் கோரிக்கைக்கு அமைவாகவே குறித்த பொதியிடல் இயந்திரம் உற்பத்திப்பிரிவு பொறுப்பு அதிகாரியிடம் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கௌரவ கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் ஆச்சிரம தொண்டர்கள் சகிதம் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)