கோட்டாபய அரசில் மூடப்பட்ட சதொச கிளைகளை மீளத்திறக்குக

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

கோட்டாபய அரசில் மூடப்பட்ட சதொச கிளைகளை மீளத்திறக்குக

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசினால் இழுத்து மூடப்பட்ட கிழக்கு மாகாணத்தில் இயங்கிய லங்கா சதொச கிளைகளை மீளவும் திறந்து மக்கள் பயன்பபெற ஆவன செய்யப்பட வேண்டுமெனக் கோரும் தீர்மானம் ஒன்று சம்மாந்துறை பிரதேச சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பிரதேச சபையின் நான்காவது சபையின் 60 ஆவது அமர்வு தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் தலைமையில், சபை சபா மண்டபத்தில் (வியாழன் - 09) நடைபெற்ற போதே ஜனாதிபதியையும், துறைசார் (வர்த்தக) அமைச்சரையும் கோருவதற்கான மேற்படி தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அரசு ஆடசிக்கு வந்ததும் கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக முஸ்லிம், தமிழ்ப்பிரதேசங்களில் இயங்கிவந்த சுமார் 15 லங்கா சதொச கிளைகள் (விற்பனை நிலையங்கள்) அரசியல் பழிவாங்கலாக இழுத்து மூடப்பட்டமை தொடர்பில் சபையில் பிரஸ்தாபித்த தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர், மேற்படி கோரிக்கை தொடர்பிலான பிரேரணையையும் முன்மொழிந்தார்.

தவிசாளர் மாஹிர் இது தொடர்பான பிரேரணையை முன்மொழிந்து சபையில் உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.

“லங்கா சதொச மூலம் மக்களுக்கு நியாய விலையிலும், அரசின் நடவடிக்கைகளின் கீழ் குறைந்த விலையிலும் அன்றாட தேவைக்கான அத்தியாவசியப் பொருட்களுட்பட பல பொருட்களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

நாடும், மக்களும் எதிர்நோக்கி வரும் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாழ்க்கைச் செலவு உயர்வு மக்களைப் பெரிதும் பாதித்துள்ளது.

இந்நிலையில் சதொச விற்பனை நிலையங்கள் (கிளைகள்) மூலம் ஓரளவேனும் நுகர்வோராகிய பொது மக்கள் தமக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு இருந்து வருகின்றது.

ஆனால், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம், தமிழப் பிரதேசங்களில் இயங்கி வந்த பல லங்கா சதொச கிளைகளை கடந்த கோட்டாபாய அரசு இழுத்து மூடிவிட்டதால் சுமார் 15 கிளைகள் இன்றைய இக்கட்டான நிலையில் கூட சதொசவின் பயனை கிழக்கு வாழ் முஸ்லிம், தமிழ் மக்கள் இழந்துள்ளனர்.

பதினைந்து வருடகாலமாக நிந்தவூரில் இயங்கி வந்த லங்கா சதொச கிளை கூட பழிவாங்கலின் போது இழுத்து மூடப்பட்டமையையும் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட வேண்டும்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மேற்படி துறைசார் அமைச்சராக இருந்தபோது மக்களின் தேவையறிந்து, கிழக்கின் முஸ்லிம், தமிழ்ப் பிரதேசங்களில் பல சதொச கிளைகளைத் திறந்து வைத்திருந்தார். இத்தகைய கிளைகளையும் கோட்டாபாய அரசு இழுத்து மூடி அரசியல் பழிவாங்கல் செய்ததாக அப்போது பேசப்பட்டது.

எது எப்படியிருப்பினும் லங்கா சதொச கிளைகளின் தேவையும், அவசியமும் கிழக்கு வாழ் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. இன்றும் கூட ஏழு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை லங்கா சதொச குறைத்துள்ளதாகவும், பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகளையும் நியாய விலையில் சதொச விற்பனை செய்யவுள்ளதாகவும் அறிவித்தல்கள் வெளியாகியுள்ளன.

எனவே, இத்தகைய பயன்களை எமது மக்களும் பெறுவதற்காக கிழக்கில் கோட்டாபாய அரசு காலத்தில் இழுத்து மூடப்பட்ட சகல சதொச கிளைகளையும் தாதமின்றி மீளவும் திறந்து மக்கள் பயன்பெற ஜனாதிபதி ரணில் தலைமையிலான அரசு ஆவன செய்ய வேண்டும்” என்றார்.

பிரேரணை ஏகமனதாக சபையில் நிறைவேற்றப்பட்டதுடன், இது தொடர்பான கோரிக்கைத் தீர்மானத்தை ஜனாதிபதி மற்றும் துறைசார் அமைச்சருக்கு அனுப்பி வைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

கோட்டாபய அரசில் மூடப்பட்ட சதொச கிளைகளை மீளத்திறக்குக

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)