கொழும்பு மறைமாநில 8வது பேராயர் மண்ணுலக வாழ்விலிருந்து விடைபெற்றார்

இலங்கையின் எட்டாவது கொழும்பு மறைமாநில ஓய்வுநிலை பேராயர் மேதகு முனைவர் ஒஸ்வல்ட் கோமிஸ் தனது 90வது வயதில் இறைவனடிச் சேர்ந்தார்.

சுகவீனமுற்ற நிலையில் 03.02.2023 இறைவனடி சேர்ந்த ஆண்டகை அவர்கள் 1932 ஆம் ஆண்டு கம்பஹா மாவட்டம் களனியில் பிறந்தார்.

1958 ஆம் ஆண்டு குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 1968 ஆம் ஆண்டு கொழும்பு மறைமாநிலத்தின் துணை ஆயராக அருட்பொழிவு செய்யப்பட்டு 27 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு 1995 ஆம் ஆண்டு அநுராதபுரம் மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டார்.

மேலும் கடந்த 2002 ஆம் ஆண்டு கொழும்பு மறைமாநிலத்தின் பேராயராக நியமிக்கப்பட்டு 2009 ஆம் ஆண்டு வரை பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையிலேயே ஆண்டகை தனது இவ்வுலக வாழ்க்கையிலிருந்து விடைபெற்றுள்ளார்.