
posted 12th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான கஞ்சா
எழுதுமட்டுவாள் மற்றும் சுழிபுரம் பகுதிகளில் சுமாா் 64 கிலோ கஞ்சா வியாழக்கிழமை (09) மீட்கப்பட்டுள்ளது.
கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து 09 அன்று பிற்பகல் 4.30 மணியளவில் மோட்டாா் சைக்கிள் ஒன்றை சோதனையிட்டனா். இதன்போது குறித்த கஞ்சா மீட்கப்பட்டது. இதனை அடுத்து சந்தேக நபர் தப்பி ஓடிய நிலையில், அவரைக் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, சுழிபுரம் காட்டுப் பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 50 கிலோ கேரள கஞ்சாவை இராணுவத்தினா் மீட்டனா். இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில் மேற்படி கஞ்சா மீட்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)