
posted 18th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
குர்ஆன் மனனம் மற்றும் இஸ்லாமியக் கல்வி பாடத்திட்டத்திற்கான மத்ரஸதுல் இக்ராம் ஆரம்பம்
தலைமன்னார் பியர் றிசாட் சிட்டி சின்னப் பள்ளிவாயல் மத்ரஸா வளாகத்தில் ஹிப்ழு (குர்ஆன் மனனம்) மற்றும் இஸ்லாமியக் கல்வி பாடத்திட்டத்திற்கான மத்ரஸதுல் இக்ராம் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வானது மத்ரஸதுல் இக்ராம் அதிபர் மௌலவி ஏ.சி.எம். சர்ஜூன் (இஹ்யாயி) அவ்ர்களின் தலைமையில் வெள்ளிக்கிழமை (17) நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கொழும்பு அல் ரஷாத் அரபுக் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ் ஷைக் மௌலவி எம்.எஸ்.எம். இஹ்ஸான் ரஷாதி கலந்து கொண்டார்.
அத்துடன் பொது மக்களும் பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த நிலையில் தலைமன்னார் பகுதி இந்து, பௌத்தம், கத்தோலிக்க மதத் தலைவர்கள் கலந்து கொண்டு ஆசியுரைகள் வழங்கினர்.
ஹஹிப்ழு (குர்ஆன் மனனம்) மற்றும் இஸ்லாமியக் கல்வி பாடத்திட்டத்திற்கான மத்ரஸதுல் இக்ராம் இக் கல்லூரிக்கு தற்பொழுது 58 மாணவர்கள் இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)